தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...


PUBLISHED ON : அக் 08, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 08, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கன்னியாகுமரி தமிழ் பேசும், ரஜினி!

ஜெயிலர் படத்தை அடுத்து, ஞானவேல் இயக்கும், தன், 170வது படத்தில் நடிக்கிறார், ரஜினி. போலி என்கவுன்டர் கதையை மையப்படுத்தி உருவாகும் இந்த படத்தில், போலீஸ் வேடத்தில் நடிக்கிறார். கன்னியாகுமரி கதைக்களத்தில் இப்படம் உருவாவதால், அங்குள்ள மக்கள் பேசும் தமிழை பேச, பயிற்சி எடுத்து வருகிறார், ரஜினி.

'அந்தந்த வட்டார வழக்கங்களில் நடிக்கும் போது தான், அந்த கதை மற்றும் கதாபாத்திரங்களுக்கு உயிர்ப்பு இருக்கும். இந்த படத்தில், என்னுடைய, 'பர்பாமன்ஸ்' மட்டுமின்றி, பேச்சையும் வித்தியாசமாக வெளிப்படுத்துவதில் கூடுதல் ஆர்வம் காட்டப் போகிறேன்...' என்கிறார்.

— சினிமா பொன்னையா

மீண்டும் கூட்டணி அமைக்கும், கார்த்தி!

தன்னை வைத்து, 'ஹிட்' படங்களை கொடுத்த இயக்குனர்கள் படங்களில், மீண்டும் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார், கார்த்தி.

அந்த வகையில், கைதி படத்தை அடுத்து, மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கும், அப்படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கிறார். அவரை வைத்து, மெட்ராஸ் படத்தை இயக்கிய, பா.ரஞ்சித் இயக்கத்திலும் அடுத்து நடிக்கப் போகிறார். இந்த படங்களை தொடர்ந்து, சிறுத்தை சிவா இயக்கும் ஒரு படத்திலும், நடிக்க போகிறார், கார்த்தி.

சி.பொ.,

ராஷ்மிகாவுக்கு அதிர்ச்சி கொடுத்த, பாலிவுட்!

கன்னட நடிகையான, ராஷ்மிகா மந்தனா, தெலுங்கில், 'நம்பர் ஒன்' நடிகையானார். அதை அடுத்து, தமிழில் நடித்த முதல் படமே, அவருக்கு அதிர்ச்சி தோல்வியாக அமைந்த நிலையில், பாலிவுட்டில், 'என்ட்ரி' கொடுத்தார். அங்கும், அவர் நடித்த இரண்டு படங்களும், அடுத்தடுத்து தோல்வியாக அமைந்தன.

இதனால், 'தெலுங்கு தான் எனக்கு எப்போதுமே கை கொடுக்கும்...' என்று, பாலிவுட்டை காலி பண்ணி, தெலுங்கில், விட்ட இடத்தை பிடிக்க, மீண்டும் ஹைதராபாத்தில் முகாமிட்டுள்ளார், ராஷ்மிகா.

எலீசா

அப்பாவிடம் அரசியல் ஆலோசனை பெற்ற, விஜய்!

கடந்த சட்டசபை தேர்தலுக்கு முன்பே, விஜயை அரசியல் கட்சி துவங்குமாறு கூறியவர், அவரது தந்தை, எஸ்.ஏ.சந்திரசேகர். அப்போது, ரஜினி, கமல் என, இருவருமே அரசியலுக்கு வர தயாரானதால், பின் வாங்கி விட்டார், விஜய். இதன் காரணமாக, அவருக்கும், அவர் தந்தைக்குமிடையே கருத்து மோதல் எழுந்தது.

இதனால், சில ஆண்டுகளாக தந்தையிடம் பேசாமல் இருந்து வந்த, விஜய், சமீபத்தில், அவரை நேரில் சந்தித்து, சமரசம் ஆகிவிட்டார். விரைவில், தன் ரசிகர் மன்றத்தை, அரசியல் கட்சியாக துவங்க திட்டமிட்டிருக்கும், விஜய், தன் கட்சிக்கு என்ன பெயர் வைக்கலாம், எப்படிப்பட்ட கொள்கைகளை முன்னெடுத்து, அரசியலில் பயணிக்கலாம் என, தந்தையிடம் ஆலோசனை பெற்றுள்ளார், விஜய்.

— சினிமா பொன்னையா

கறுப்பு பூனை!

தாரா நடிகை நடித்த, முதல் பாலிவுட் படத்தில், அதே படத்தில் இன்னொரு நாயகியான நடித்த அந்த பாலிவுட் நடிகைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதற்காக, தாராவின் பல வலுவான காட்சிகளுக்கு கத்தரி போட்டு இருக்கின்றனர்.

இது குறித்து, பட இயக்குனரிடம், 'இப்படத்தில், என்னை ஒப்பந்தம் செய்யும் போது, 'நீங்கள் தான் முக்கிய நாயகி' என்று கூறி, இப்போது, என்னை இரண்டாவது நாயகி போல் ஆக்கிவிட்டீர்களே... இப்படி பேச்சு மாறலாமா? யாராக இருந்தாலும் நாக்கு சுத்தமாக இருக்க வேண்டும்...' என, தன் கோபத்தை, வெளிப்படுத்தியுள்ளார், நடிகை.

சினி துளிகள்!

* தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், அடுத்து, ஹிந்தியில், வருண் தவானுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கப் போகிறார். இது சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்த, சமீபத்தில் மும்பை சென்ற, கீர்த்தி சுரேஷ், நடிகர் வருண் தவானுடன் ஒரே ஆட்டோவில் பயணித்திருக்கிறார்.

* தன், 'ரவுடி பிக்சர்ஸ்' மூலம், பல படங்களை தயாரித்துள்ளார், நயன்தாரா. மீண்டும் படங்கள் தயாரிக்க, புதிய கதைகளை கேட்டு வருகிறார்.

* ஜவான் படத்திற்காக, 'கம்போஸ்' செய்த, 'சலேயே...' என்ற பாடல், உலகின் பிரபலமான, பில்போர்ட் தளத்தில், 97வது இடம் பிடித்துள்ளதால், மட்டற்ற மகிழ்ச்சியில் இருக்கிறார், இசை அமைப்பாளர், அனிருத்,

அவ்ளோதான்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us