தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...


PUBLISHED ON : அக் 15, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 15, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'மெகா பட்ஜெட்' படமாக மாற்றிய, சிம்பு!

பத்து தல படத்திற்கு பின், தேசிங்கு பெரியசாமி இயக்கும், தன், 48வது படத்திற்காக நீண்ட தலைமுடி மற்றும் பெரிய தாடி, 'கெட் - அப்'புக்கு மாறி உள்ளார், சிம்பு.

மேலும், கமலஹாசனின், 'ராஜ்கமல் பிலிம்ஸ்' தயாரிக்கும் இந்த படத்தை, 'பான் இந்தியா' படமாக்கி விட வேண்டும் என்பதற்காக, மாற்று மொழி நடிகர்களை இப்படத்தில் நடிக்க வைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.

தற்போது, கன்னடத்தில் வெளியான, கேஜிஎப் படத்திற்கு இசையமைத்த, ரவி பஸ்ரூர் என்பவரையும், இந்த படத்தில், 'புக்' பண்ண வைத்து, 'மெகா பட்ஜெட்' படமாக மாற்றி விட்டார், சிம்பு.

— சினிமா பொன்னையா

மீண்டும் கோதாவில் குதித்த சினேகா!

திருமணத்திற்கு பின், சினிமாவில் கோலோச்சி வரும் பல நடிகையரை பார்த்து, சினேகாவுக்கும் ஆசை வந்து விட்டது. அதனால், இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவான போதும், தீவிரமாக முயற்சி செய்து, எடையை குறைத்துள்ளார்.

தற்போது, தன், 'மாஜி ஹீரோ'களுக்கு ஜோடியாகவும், மெச்சூரிட்டியான வேடங்களில் நடிக்கவும் தயாராகி விட்டார்.

அந்த வகையில், விஜய் நடிக்கும், 68வது படத்தில், அப்பா விஜய்க்கு ஜோடியாக, சினேகா நடிக்க இருக்கிறார். அதோடு, இளவட்ட, 'ஹீரோ'கள் நடிக்கும் படங்களில், நதியா பாணியில், இளமையான அம்மா வேடங்களில் நடிக்க தயாராக இருப்பதாக, 'கிரீன் சிக்னல்' கொடுத்துள்ளார், சினேகா.

— எலீசா

பாலிவுட்டில் கால் பதிக்கும் சமந்தா!

ஹிந்தியில், 'பேமிலிமேன் - 2' என்ற, 'வெப்' தொடரில் நடித்திருந்த, சமந்தா, ஷாருக்கான் நடிப்பில், அட்லி இயக்கிய, ஜவான் படத்திலும் நடிப்பதாக இருந்தது. ஆனால், 'கால்ஷீட்' பிரச்னை காரணமாக, அவருக்கு பதிலாக, நயன்தாரா நடித்தார்.

இந்நிலையில், நடிப்புக்கு சிறிய, 'பிரேக்' கொடுத்திருக்கும், சமந்தா, அடுத்து, ஹிந்தியில், சல்மான்கானுக்கு ஜோடியாக நடித்து, பாலிவுட்டில், 'என்ட்ரி' கொடுக்க தயாராகிக் கொண்டிருக்கிறார்.

நயன்தாராவை போலவே, முதல் படத்திலேயே, பாலிவுட் மார்க்கெட்டை தட்டி துாக்கி விட வேண்டும் என்பதற்காக, தற்போது, தன் உடற்கட்டை சீர்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

எலீசா

கட்டுமஸ்தான உடற்கட்டில், சிவகார்த்திகேயன்!

ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் தன், 21வது படத்தில், ராணுவ வீரராக நடித்து வருகிறார், சிவகார்த்திகேயன். இதற்காக, பல மாதங்கள் கடினமான உடற்பயிற்சி செய்து, கட்டு மஸ்தான உடற்கட்டுக்கு மாறி உள்ளார்.

இந்த படத்தை முடித்துவிட்டு, அடுத்து, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில், போலீஸ் அதிகாரி வேடத்தில், நடிக்கப் போகிறார், சிவகார்த்திகேயன்.

'ராணுவ வீரராக நடிப்பதற்காக மாற்றிய, 'சிக்ஸ் - பேக்' உடற்கட்டு, இந்த படத்துக்கும் பொருத்தமாக அமைந்துவிட்டது...' என்கிறார்.

— சினிமா பொன்னையா

கறுப்பு பூனை!

* திடீரென்று தன் மார்க்கெட் சரிந்து விட்டதால், பெரிய அளவில் மனசுடைந்து போனார், ரவுடி பேபி நடிகை. எதிர்பாராத விதமாக டோலிவுட்டிலிருந்து அவருக்கு புதிய படங்கள் வந்ததால் மறுபடியும் வரிந்து கட்டி நிற்கிறார்.

முதல் ரவுண்டில், அழுத்தமான வேடம் என்பதில் உறுதியாக இருந்த அம்மணி, தற்போது, மெகா சம்பளம் கொடுத்தால், கதாபாத்திரத்தில் விட்டுக் கொடுத்து நடிப்பதற்கும் தான் தயாராக உள்ளதாக கூறுகிறார்.

மேலும், 'இதுவரை கணுக்கால் கவர்ச்சி காட்டுவதற்கே, 'செக் போஸ்ட்' வைத்த நான், அவசியப்பட்டால், 'டூ பீஸ்' கலாசாரத்தை கையில் எடுக்கவும் தயாராக இருக்கிறேன்...' என, கமர்ஷியல் பட, 'ஹீரோ'களுக்கு, இனிப்பு செய்தி வெளியிட்டுள்ளார்.

* மாநாடு வில்லனுக்கு, ஒருவிதமான மனநோய் இருப்பதாக, கோலிவுட்டில் பேசிக் கொள்கின்றனர். 'ஓசிடி' எனப்படும் மனநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் அவர், நன்றாக சிரித்து பேசிக் கொண்டிருக்கும் போதே, திடீரென்று கோபமாக கத்தி விடுகிறார்.

அவரது இந்த திடீர் கோபம் காரணமாக, பலர் அவரிடம் சண்டை செய்து வருகின்றனர். இந்த நோய்க்கு, சில மன நல மருத்துவர்களை அவர் நாடிய போதும், அதிலிருந்து நடிகரால் விடுபட முடியவில்லை. இதனால், படப்பிடிப்பு தளங்களில், அவரை நெருங்கவே, பலரும் அஞ்சி நிற்பதாக கூறுகின்றனர்.

சினி துளிகள்!

* சாய் பல்லவி நடித்த, தமிழ், தெலுங்கு படங்களை பார்த்த, சில பாலிவுட், 'ஹீரோ'கள், ஹிந்தி சினிமாவுக்கு வருமாறு அவருக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

* பல படங்களில், 'ஹீரோ'வாக நடித்துள்ள, எஸ்.ஜே.சூர்யாவின், வில்லன் மார்க்கெட் சூடு பிடித்து விட்டதால், தற்போது, 'ஹீரோ'வாக நடிப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை.

* சமுத்திரம், விருமாண்டி போன்று சில படங்களில் நடித்த, அபிராமி, திருமணத்திற்கு பின், அமெரிக்காவில் 'செட்டில்' ஆனார். மீண்டும் நாடு திரும்பி, சினிமாவில் நடித்து வருபவர், சமீபத்தில், கல்கி என்ற ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து, வளர்த்து வருகிறார்.

அவ்ளோதான்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us