தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...


PUBLISHED ON : ஆக 14, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 14, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வரிவிலக்கு - அரசு புதிய கட்டுப்பாடு!

கடந்த ஆட்சியில், தமிழில் பெயரிடப்படும் படங்களுக்கு, வரிவிலக்கு அளிக்கப்பட்டது; அதே வரிவிலக்கு இப்போதும் வழங்கப்படுகிறது. என்றாலும், சில புதிய கட்டுப்பாடுகளை அரசு அறிவித்துள்ளது. அதிகப்படியான ஆபாசம், வன்முறை கூடாது, கதையின் கரு, தமிழ் பண்பாட்டை சார்ந்து இருக்க வேண்டும், பெருமளவு தமிழ் வசனங்கள் இருத்தல் அவசியம் என்று தமிழக அரசின் செய்தி குறிப்பு தெரிவித்துள்ளது. இவற்றை ஆராய, ஒரு தனி தணிக்கை குழுவும் அமைக்கப்பட உள்ளது.

சினிமா பொன்னையா.

உணர்வுப்பூர்வமான கதையில் ப்ரியாமணி!

'தமிழில், மீண்டும் நல்ல கதை கிடைத்தால் மட்டுமே நடிப்பேன்...' என்று சொல்லி வந்த ப்ரியாமணி, வசந்த் இயக்கும், நடை - உடை - பாவனை என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தில், கிளாமர் அல்லாத உணர்வுப்பூர்வமான வேடத்தில் நடிப்பதாக சொல்பவர், இதுவும், பருத்திவீரன் மாதிரி, 'வெயிட்' ஆன படம் என்கிறார். கூத்துக்கு ஏற்ற கொட்டுக் கொட்டுகிறது!

எலீசா.

ஜிம்பாய் ரோலில் விக்ரம்!

தெய்வத் திருமகள் படத்துக்காக, உடல் எடையை குறைத்த விக்ரம், அடுத்து நடிக்கும், ராஜபாட்டை படத்துக்காக உடம்பை கட்டுமஸ்தாக மாற்றுகிறார். கதைப்படி இப்படத்தில் அவருக்கு ஜிம்பாய் வேடம் என்பதால், சிம்பு, விஷால் போன்று தானும் சிக்ஸ் பேக் உடல்கட்டுக்கு மாறி வருகிறார். அந்த வகையில், சாமியில் நடித்த ஆறுச்சாமி கேரக்டரை விட, இந்த, ராஜபாட்டை படத்தில் அதிரடி விக்ரமை பார்க்கலாம் என்கிறார்.

சி.பொ.,

மகளிர் அணி தலைவி சோனா!

விஜய்யின் கட்சியில் சேர, விருப்பம் தெரிவித்து வரும் சோனாவுக்கு, மகளிர் அணி தலைவியாக வேண்டும் என்பதுதான் நோக்கம். அதனால், இதுகுறித்து, விரைவில் விஜய் அல்லது அவரது தந்தையை சந்தித்து, தன் விருப்பத்தை அவர்களிடம் முறைப்படி தெரிவிக்கவும் முடிவெடுத்துள்ளார். எல்லாம் ஏறி இளைத்த குதிரையின் மேல் பொற்பட்டம் கட்ட புறப்பட்ட கதை!

எலீசா.

சிங்கள படத்தில் பூஜா!

தமிழில், ஜே ஜே என்ற படத்தில் அறிமுகமான பூஜாவுக்கு, நான் கடவுள் படத்துக்குப் பிறகு, பட வாய்ப்புகள் இல்லை. இதனால், பெங்களூருவில் செட்டில் ஆன பூஜா, தற்போது குச பாபா என்ற சிங்கள மொழி படத்தில் நடிக்க கால்ஷீட் கொடுத்துள்ளார். ஆனால், 'தமிழர்களை கொன்று குவித்த சிங்கள நாட்டு படத்தில், பூஜா நடிக்கக் கூடாது...' என்று, இந்து மக்கள் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இருப்பினும், சிங்களப் பெண்ணான பூஜா, அப்படத்தில் நடிப்பதை உறுதி செய்திருக்கிறார். தன்னை ஒளித்து ஒரு வஞ்சனை இல்லை!

எலீசா.

இந்திக்கு செல்லும் அஜ்மல்!

கோ இந்தி ரீ-மேக்கில் நடிக்கவுள்ள அக்ஷய் குமார், அஜ்மல் நடிப்பைப் பார்த்து அசந்து விட்டார். அதனால், தமிழில் நடித்த அதே ரோலில், இந்தியிலும் நடிக்க வேண்டுமென்று அஜ்மலை மும்பைக்கு அழைத்திருக்கிறார். இதனால், தனக்கு சான்ஸ் தர பல தமிழ் இயக்குனர்கள் முன்வந்த போதும், மும்பைக்கு ஓட்டம் பிடித்து விட்டார் அஜ்மல்

சி.பொ.,

மராத்திய மொழியில் இளையராஜா!

இதுவரை தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, ஆங்கிலம் என்று, ஆறு மொழிப் படங்களுக்கு இசையமைத்துள்ளார் இளையராஜா. அந்த வகையில், 950 படங்கள் வரை இசையமைத்திருக்கும் அவர், தற்போதுதான் முதன் முறையாக ஒரு மராத்திய மொழிப் படத்துக்கு இசையமைக்கிறார். ஹலோ ஜெய்ஹிந்த் என்ற பெயரில் உருவாகும் அப்படம், மும்பையில் நடந்த ஒரு பிரச்னையை மையமாகக் கொண்டு தயாராகிறது.

சி.பொ.,

சிம்புவுக்காக தனி சேனல்!

தற்போது, 'குறள் டிவி' என்றொரு, 'வெப் டிவி' நடத்தி வரும் டி.ராஜேந்தர், விரைவில் அதை சாட்டிலைட் சேனலாக மாற்ற உள்ளார். ஆனால், இதில் மற்ற சேனல்கள் மாதிரி இல்லாமல், 60 சதவீதம் சிம்பு சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள் மட்டுமே ஒளிபரப்பாகுமாம்; மீதி, 40 சதவீதம், டி.ஆர்., வழங்கும் நிகழ்ச்சிகள் இடம்பெறும்.

— சினிமா பொன்னையா.

அவ்ளோதான்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us