தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/திண்ணை!

திண்ணை!

திண்ணை!


PUBLISHED ON : ஆக 14, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 14, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தாஜ்மகால், உன்னதமான காதல் கோவில் எனத் தெரியும். அதன் அஸ்திவாரம், கிணறுகள் போன்ற அமைப்பின் மீது, உறுதியான பாறைகளின் மேல் உருவாக்கப்பட்டுள்ளது. இவற்றை, இதற்கென்றே விசேஷமாகத் தயாரிக்கப்பட்ட மர உத்திரங்கள், தாங்கிக் கொண்டிருக்கின்றன. அஸ்திவாரக் கற்களை, இந்த மர உத்திரங்கள் இணைக்கின்றன. இந்த மர உத்திரங்களை, தாமிரத் தகடுகளால் ஒன்றோடொன்று பொருத்தியுள்ளனர்.

இப்படியொரு நூதனமான அஸ்திவாரம், தாஜ்மகாலைத் தாங்கிக் கொண்டிருக்கிறது. இவ் வாறு அஸ்திவாரம் அமைக்கப்பட்டதற்குக் காரணம் என்ன? அதிர்ச்சி ஏதாவது ஏற்பட்டால், கட்டடத்திற்கு சேதம் வராமல், இந்த அஸ்திவாரம், அந்த அதிர்ச்சிகளைத் தாங்கிக் கொள்ளும். பூகம்பங்கள் ஏற்பட்டால் கூட, கட்டடம் அங்கு மிங்கும் ஆடுமே தவிர, இடிந்து விழுந்து விடாது.

'உலக அதிசயங்கள்' நூலிலிருந்து...


இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன், சினிமாவில் நடிகராக ஆக வேண்டும் என்ற ஆசையில்தான் சென்னை வந்தார். கீழ்பாக்கத்தில் இருந்த ஜூபிடர் பிக்சர்ஸ், கண்ணகி படம் துவங்கியிருந்த வேளை. ஹீரோ - பி.யூ.சின்னப்பா. ஹீரோயின் - பி.கண்ணாம்பா. இதில், எம்.எஸ்.வி.,க்கு பால கோவலன் வேடம் கொடுக்கப்பட்டது. பால கண்ணகியாக, பிரபல பின்னணிப் பாடகி, டி.வி.ரத்தினம் நடிக்க, படப்பிடிப்பு நடந்தது. மறுநாள், 'ரஷ்' (எடுத்தவரை படத்தைத் திரையிட்டு) பார்த்து, 'அந்தப் பெண்ணுக்குத் தம்பி மாதிரி இருக்கிறாய்...' என்று கூறி, எம்.எஸ்.வி.,யை நீக்கி விட்டனர்.

'அக்கா மாதிரி வயது அதிகமாய் தெரிந்த பெண்ணை கேன்சல் பண்ணலை; தம்பி மாதிரி இருக்கேன்னு என்னைக் கேன்சல் பண்ணி விட்டனரே...' என்று புலம்பினார் எம்.எஸ்.வி., பின்னர், ஜூபிடர் பிக்சர்ஸ் கோவையில் ஸ்டுடியோ அமைத்த போது, எம்.எஸ்.வி., அங்கு போய், 'புரொடக்ஷன் பாயாக, வருபவர்களுக்கு காபி, டீ, டிபன் கொடுக்கும் வேலை பார்த்து வந்தார். அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த எம்.ஜி.ஆர்., கருணாநிதி, எம்.என்.நம்பியார், எம்.ஜி.சக்ரபாணி ஆகியோர் தங்கியிருந்த லாட்ஜிலேயே எம்.எஸ்.வி.,யும் தங்கிக் கொண்டார். சம்பளம் மாதம், இருபது ரூபாய்.

பின்னர் சுப்பையா நாயுடு, சுப்பராமன் ஆகிய இசையமைப்பாளர்களிடம் சேர்ந்து, தொழில் கற்றுக் கொண்டார். முதல் முதலாக ஜெனோவா படத்திற்கு இசை அமைப்பாளரானார். படத்தின் கதாநாயகன் எம்.ஜி.ஆருக்கு, இது பிடிக்கவில்லை. 'ஜூபிடர் ஆபீசில் காபி, டீ கொடுத்து, ஆபீஸ் பாயாக இருந்தவனுக்கு, மியூசிக் பத்தி என்ன தெரியும்...' என்றார் எம்.ஜி.ஆர்., ஆனால், தயாரிப்பாளர் உறுதியாக இருந்தார்.

படத்தின் பாடல்கள் அனைத்தையும், 'ஹிட்' செய்தார் எம்.எஸ்.வி., பிற்காலத்தில் எம்.ஜி.ஆர்., படங்களின் வெற்றிகளுக்கு எம்.எஸ்.வி., இசை யமைத்த பாடல்களே பெரும் பங்கு வகித்தன. விதியின் விளையாட்டு!

***

அமெரிக்காவில், உள்நாட்டுப் போர் நடந்து கொண்டிருந்த சமயம். அப்போது, அமெரிக்க அதிபராக இருந்த ஆபிரகாம் லிங்கன், தன்னுடைய ராணுவத் தளபதி ஒருவர், போர் முனைச் செய்திகளை உடனுக்குடன் அனுப்புவதில்லை என்று கோபப்பட்டு, அவருக்குக் கடுமையான கடிதம் ஒன்று எழுதினார்.

ஆத்திரமடைந்த ராணுவத் தளபதி, 'ஆறு பசு மாடுகளைக் கைப்பற்றியிருக் கிறோம். அவற்றை, என்ன செய்வது என்ற உத்தரவுக்காகக் காத்திருக் கிறோம்...' என்று குறிப்பிட்டார். தன்னுடைய எரிச்சலைக் காட்டுவதற்காகவே, அந்தத் தளபதி இவ்வாறு தந்தி கொடுத்தார்.

லிங்கன் கோபப்படவில்லை. கீழ்கண்டவாறு பதில் தந்தி கொடுத்தார். 'ஆறு பசு மாடுகளைப் பிடித்த உங்களுடைய தீரச் செயலைப் பாராட்டு கிறேன். அவற்றை என்ன செய்வது என்று கேட்டிருக்கிறீர்கள். காலை, மாலை இரண்டு வேளையும் தவறாது பாலை கறக்க ஏற்பாடு செய்யுங்கள்!'

'லிங்கனின் வாழ்க்கை வரலாறு' நூலிலிருந்து...

நடுத்தெரு நாராயணன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us