தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...


PUBLISHED ON : டிச 03, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 03, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆங்கிலத்தில், 'டைட்டில்' ஏன்?

தன் படங்களுக்கு எப்போதுமே துாய தமிழில், 'டைட்டில்' வைத்து வரும், மணிரத்னம், தற்போது, கமலை வைத்து இயக்க இருக்கும் படத்திற்கு, தக் லைப் என்று, ஆங்கிலத்தில், 'டைட்டில்' வைத்துள்ளார்.

இதற்கான காரணம் குறித்து, மணிரத்னம் கூறுகையில், 'இந்த படத்தை, ஐந்து மொழிகளில் தயாரிக்கிறோம். அதோடு, சர்வதேச அளவில் வெளியிடுவதற்கும் திட்டமிட்டுள்ளோம்.

'அது போன்ற படங்களுக்கு, ஆங்கிலத்தில், 'டைட்டில்' வைத்தால் மட்டுமே, அந்த படம் வியாபார ரீதியாக, 'ரீச்' ஆகும். அதன் காரணமாகவே, ஆங்கில படங்களுக்கு வைப்பது போன்று, தக் லைப் என்று, 'டைட்டில்' வைத்துள்ளேன்...' என்கிறார்.

— சி.பொ.,

பான் இந்தியா வில்லனான, எஸ்.ஜே.சூர்யா!

மாநாடு, மார்க் ஆண்டனி மற்றும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என, பல படங்களில் வில்லனாக நடித்து, பிரபலமாகி விட்ட, எஸ்.ஜே.சூர்யாவுக்கு, தற்போது, தெலுங்கு மற்றும் மலையாள சினிமாவிலும் வரவேற்பு கிடைத்து வருகிறது.

குறிப்பாக, தமிழ் சினிமாவில், எஸ்.ஜே.சூர்யாவுக்கென்று ஒரு பெரிய ரசிகர் வட்டம் உருவாகி விட்டது. எஸ்.ஜே.சூர்யாவை தங்கள் படங்களில் வில்லனாக நடிக்க வைத்தால், அந்த படத்தை தமிழில் பெரிய அளவில் வியாபாரம் செய்யலாம் என்ற நோக்கத்தில், அவரை ஒப்பந்தம் செய்ய ஆரம்பித்துள்ளனர், மற்ற மொழி இயக்குனர்கள்.

இதன் காரணமாக, பான் இந்தியா வில்லனாக உருவெடுத்து நிற்கிறார், எஸ்.ஜே.சூர்யா.

— சினிமா பொன்னையா

த்ரிஷாவின், கார் மோகம்!

நாற்பது வயது முரட்டு சிங்கிளான, நடிகை த்ரிஷாவின் மார்க்கெட், மீண்டும் சூடு பிடித்துள்ளது. மேலும், சென்னை, ஹைதராபாத் போன்ற நகரங்களில் சொகுசு பங்களா வைத்திருக்கும், த்ரிஷா, மிகப்பெரிய கார் பிரியர்.

அதன் காரணமாகவே, 80 லட்சம் ரூபாய் மதிப்பில், மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் கிளாஸ் கார், 70 லட்சம் மதிப்பில், பி.எம்.டபிள்யூ., 5 சிரிஸ் கார், 60 லட்சம் மதிப்பில், ரேஞ்ச் ரோவர் எவோக் கார் மற்றும் ஐந்து கோடி மதிப்பில், பி.எம்.டபிள்யூ., ரீகல் ஆகிய சொகுசு கார்களை தற்போது வைத்திருக்கிறார்.

ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு கார்களில் அவர் படப்பிடிப்பு தளங்களுக்கு வந்து இறங்குகிறார்.

எலீசா

தமிழில் விஜய்சேதுபதியின், முதல் ஹிந்தி படம்!

ஹிந்தியில், விஜய்சேதுபதி நாயகனாக நடித்துள்ள முதல் படம், மெரி கிறிஸ்துமஸ். அவருக்கு ஜோடியாக, பாலிவுட் நடிகை, கைத்ரினா கைப் நடித்திருக்கும் இந்த படம், பொங்கலுக்கு திரைக்கு வர உள்ளது.

ஹிந்தியில் உருவான இந்த படத்தை, தமிழ் மற்றும் தெலுங்கில், 'டப்' செய்து வெளியிடுவதால், இந்த படத்தின் மூலம், தான் இழந்த, 'ஹீரோ' மார்க்கெட்டை மீண்டும் எட்டிப் பிடிக்க திட்டமிட்டுள்ளார், விஜய்சேதுபதி.

சினிமா பொன்னையா

கறுப்புப்பூனை!

பிசாசு இயக்குனருடன் ஏற்பட்ட மோதலில், சண்டக்கோழி நடித்து வந்த, இரண்டாம் பாகம் படம், 'டிராப்' ஆகிவிட்டது. 'மீதி படத்தை நானே இயக்கி நடிக்கப் போகிறேன்...' என்று சொல்லி, சில நாட்கள் படப்பிடிப்பு நடத்தினார், சண்டக்கோழி. ஆனால், அவர் படமாக்கிய காட்சிகள் வேலைக்கு ஆகவில்லை.

எனவே, மீண்டும், இயக்குனரிடம் சரண்டராகி, மீதமுள்ள படத்தையும் இயக்கி தருமாறு கெஞ்சி கேட்டுள்ளார், சண்டக்கோழி.

சினி துளிகள்!

* தமிழில் படங்கள் இல்லாதபோதும், மலையாளத்தில், பிரித்விராஜுக்கு ஜோடியாக, ஆடு ஜீவிதம் என்ற படத்தில் நடித்துள்ளார், அமலாபால். இந்த படத்திற்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார்.

* தற்போது, 42 வயதாகும் அனுஷ்கா, ஏற்கனவே தான் நடித்த, பாகுமதி என்ற படத்தின் இரண்டாம் பாகத்தில், கதையின் நாயகியாக நடித்து வருகிறார்.

* சொ்ந்தமாக, சில படங்களை தயாரித்து நடித்து, கடனாளியாகி விட்டார், விஷால். தற்போது, நடித்து சம்பாதித்து, அந்த கடனை அடைத்து வருகிறார்.

அவ்ளோதான்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us