
18 மொழிகளில் ஜெயம் ரவி படம்!
தமிழைத் தொடர்ந்து, தெலுங்கிலும் ரசிகர் வட்டத்தை வைத்திருக்கிறார், ஜெயம் ரவி. இருப்பினும், ரசிகர்களிடம் அவர், இன்னும் பெரிதாக, 'ரீச்' ஆகவில்லை. தற்போது அவர், நடித்து வரும், ஜீனி என்ற படத்தை, 18 மொழிகளில் வெளியிடுவதற்கு திட்டமிட்டுள்ளனர்.
இதன் காரணமாக, உற்சாகத்தில் இருக்கும் ஜெயம் ரவி, 'இந்த படம் வெளியாகி, எந்தெந்த மொழி ரசிகர் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பு பெறுகிறதோ, அதைப் பொறுத்து அடுத்தபடியாக, அந்த மொழிகளில் நேரடி படங்களில் நடித்து, என் வியாபார வட்டத்தை விரிவுபடுத்தவும் திட்டமிட்டுள்ளேன்...' என்கிறார்.
சினிமா பொன்னையா
நயன்தாராவின், வெற்றி ரகசியம்!
திருமணத்திற்கு பிறகும், நயன்தாராவின் மார்க்கெட் உச்சத்தில் இருக்கும் நிலையில், வெற்றியின் ரகசியம் குறித்து அவர் கூறுகையில், 'ரசிகர்களுக்கு பிடித்தமான விஷயங்களை தொடர்ந்து செய்து கொண்டிருந்தால், எத்தனை வயதானாலும், நம் நடிப்பை சலிப்பு தட்டாமல் பார்ப்பர்.
'அப்படி நடித்தால், எப்போதுமே நான், 'லேடி சூப்பர் ஸ்டார்' ஆகவே இருப்பேன். அதனால் தான், இதுவரை எனக்கு பிடித்த கதைகள் என்பதை மட்டுமே கருத்தில் கொண்டு நடித்த நான், இப்போது, ரசிகர்களுக்கும் பிடிக்க வேண்டும் என்ற கோணத்திலும், கதை தேர்வு செய்கிறேன். அதனால், இனிமேல் நான் நடிக்கும் படங்களில், கமர்ஷியல் காட்சிகள் அதிகமாக இடம்பெறும்...' என்கிறார், நயன்தாரா.
—எலீசா
ஹாலிவுட் பிரமாண்டம்!
லியோ படத்திற்கு பிறகு, வெங்கட் பிரபு இயக்கும், தன், 68வது படத்தில் நடித்து வருகிறார், விஜய். இந்த படம், 2012ல் வெளியான, லுாப்பர் என்ற ஹாலிவுட் படத்தை தழுவி எடுக்கப்பட்டு வருவதால், அந்த படத்திற்கு இணையான பிரமாண்டத்துடன் தன் படமும் இருக்க வேண்டும் என்று, இயக்குனருக்கு உத்தரவு போட்டு உள்ளார்.
அது மட்டுமின்றி, இப்படத்தின் சண்டைக் காட்சிகள் மற்றும் வசன காட்சிகளும் கூட பிரமாண்டமாக இருக்க வேண்டும். அதற்காக, 'லொகேஷன்' மட்டுமின்றி, நடிகர்களின், 'காஸ்ட்யூம், மேக் - அப்' என அனைத்தையும் பிரமாண்டப் படுத்தி, அதிநவீன கேமராக்களை கொண்டு படமாக்குமாறும் கூறியுள்ளார்.
சி.பொ.,
அழைப்பு விடுக்கும், ஷாருக்கான்!
ஜவான் படத்தில் ஷாருக்கான் ஜோடியாக, நயன்தாரா நடித்த நிலையில், விஜய் சேதுபதி, வில்லனாக நடித்திருந்தார். அதன் காரணமாக அந்த படம், தமிழிலும் வெளியிடப்பட்டது.
இதேபோல், அடுத்தடுத்து தான் நடிக்கும் படங்களையும், தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளிலும், 'டப்' செய்து வெளியிட ஆசைப்படுகிறார், ஷாருக்கான்.
தன்னிடம் கதை சொல்லும் பாலிவுட் இயக்குனர்களிடம், முக்கிய கேரக்டர்களில் கோலிவுட் மற்றும் டோலிவுட்டில் பிரபலமாக இருக்கும் நடிகர்,- நடிகையரையும் நடிக்க வைக்குமாறு கேட்டு வருகிறார்.
சினிமா பொன்னையா
கறுப்புப் பூனை!
தல நடிகர் நடித்து வரும், புதிய படத்துக்கு, 100 கோடி ரூபாய் பட்ஜெட் போட்டுள்ள நிலையில், ஏற்கனவே நடித்த பல காட்சிகளை, 'ரீ ஷூட்' பண்ண வேண்டும் என்று, இயக்குனரை கேட்டுள்ளார், தல.
இதனால், திட்டமிட்டதை விட அதிக நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்று வருவதால், பட்ஜெட் எகிறி விடுமே என்று, தயாரிப்பாளர் புலம்பி வருகிறார். அதோடு, 'ஒருவேளை, படம் எதிர்பார்த்தபடி ஓடவில்லை என்றால், வங்கி கடனுக்கு, வட்டியும், முதலுமாக கட்ட, என் பல சொத்துக்களை விற்க வேண்டி வரும்...' என்று பதறுகிறார், தயாரிப்பாளர்.
இதுகுறித்து, தல நடிகரின் காது கடித்தால், கடுப்பாகி விடுவார் என்பதால், இயக்குனரிடம், 'என் நிலைமையை, அவருக்கு புரிய வையுங்கள்...' என்று, கதறி வருகிறார், தயாரிப்பாளர்.
பாகுபலி வில்லனுடன் காதலில் விழுந்த, மூனுஷா நடிகை, சில ஆண்டுகளாக, 'டேட்டிங்' சென்று, 'ஜாலி' பண்ணிக் கொண்டு திரிந்தார். ஆனால், அம்மணியை, திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று, மேற்படி நடிகர் நிராகரித்த போதும், 'டேட்டிங்' வைத்துக் கொள்ள தொடர்ந்து துரத்தி வந்தார்.
திருமணம் இல்லாத நட்பை தொடர்வதை விரும்பாத நடிகை, அவரை விட்டு நிரந்தரமாக பிரிந்ததோடு, அதன் பின், டோலிவுட் படங்களிலும் நடிக்காமல் இருந்து வந்தார். தற்போது மீண்டும் மூனுஷா, டோலிவுட்டில், 'என்ட்ரி' கொடுத்திருக்கிறார்.
இதையடுத்து ருசி கண்ட பூனையான பாகுபலி வில்லன், மறுபடியும், பழைய ஞாபகத்தில் அம்மணியை நெருங்க கல்லெறிந்து வருகிறார். இதனால், 'ஷாக்'கான மூனுஷா, அவர் தன்னை நெருங்காமல் இருக்க, பலத்த செக்யூரிட்டியுடன், டோலிவுட்டில், 'விசிட்' அடித்து வருகிறார்.
சினி துளிகள்!
* லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கும், தன், 171வது படத்தில், வில்லத்தனமான வேடத்தில் நடிக்கிறார், ரஜினிகாந்த்.
* கமல், மணிரத்னம் இணையும், தக் லைப் மற்றும் அஜித்தின், விடாமுயற்சி என, மெகா படங்களில் நடித்து வரும், த்ரிஷா, தற்போது, தன் படக்கூலியை, 10 கோடி ரூபாய் என்று சொல்லி அடித்து, 'சிங்கிள் பேமென்ட்'டாக வாங்கி வருகிறார்.
* தற்போது தான் நடித்து வரும், விடாமுயற்சி படத்தில், இளமை, புதுமை என, இரண்டு விதமான,'கெட் - அப்'பில் நடிக்கிறார், அஜித்.
* வெங்கட் பிரபு இயக்கத்தில், விஜய் நடித்து வரும், 68வது படத்தில், லவ் டுடே படத்தில் நடித்த, இவானா, அவருக்கு தங்கையாக நடித்து வருகிறார்.
அவ்ளோதான்!