தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...


PUBLISHED ON : ஜன 08, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 08, 2012


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அரவான் எழுத்தாளருக்கு சாகித்ய அகடமி!

டைரக்டர் வசந்த பாலன், ஆதியை நாயகனாக வைத்து, தற்போது இயக்கி வரும் படம், அரவான். இப்படம், எழுத்தாளர் சு.வெங்கடேசன் எழுதிய, காவல் கோட்டம் என்ற நாவலை தழுவி எடுக்கப்பட்டுள்ளது. இந்த நாவலுக்கு சமீபத்தில், சாகித்ய அகடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தன் படத்துக்கும் பெருமைக்குரிய விருதுகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறார் வசந்த பாலன்.

சினிமா பொன்னையா.

விஜய் படத்துக்கு ரஹ்மானின் இசை!

விண்ணைத் தாண்டி வருவாயா படத்திற்கு பிறகு, தான் இயக்கி வரும், நீ தானே என் பொன் வசந்தம் படத்திற்கும் இசையமைக்க, ஏ.ஆர்.ரஹ்மானை அணுகினார் கவுதம் மேனன். ஆனால், அவர் ஹாலிவுட் படத்துக்கு இசை அமைப்பதை சொல்லி, நேரமில்லை என மறுத்து விட்டார். இருப்பினும், தான் அடுத்து விஜய்யை வைத்து இயக்கும், யோஹன் அத்தியாயம் ஒன்று படத்துக்கு, கண்டிப்பாக இசையமைத்து தர வேண்டும் என்று, கவுதம் கேட்டுக் கொள்ள, சம்மதம் தெரிவித்திருக்கிறார்.

சி.பொ.,

முகமூடி படத்தில் உலக அழகி!

மிஷ்கின் இயக்கும், முகமூடி படத்தில், ஜீவாவுக்கு ஜோடியாக நடிப்பவர் பூஜா ஹெக்டே. கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவரான இவருக்கு, உலக அழகியாக வேண்டும் என்பதுதான் லட்சியம்.

ஆனால், சில ஆண்டுகளுக்கு முன் நடந்த அழகி போட்டியில் பங்கேற்று, கடைசி ரவுண்டில் தோற்று விட்டார். இந்நிலையில், தற்போது சினிமாவுக்கு வந்துவிட்ட பூஜா, அடுத்து, இந்திய அளவில் நடைபெறும் அழகி போட்டியிலாவது முதலிடம் பிடிக்க வேண்டும் என்ற ஆசையில் உள்ளார். ஆசைக்கு இல்லை அளவென்ற எல்லை.

எலீசா.

தமிழில் பிசியான ஆண்ட்ரியா!

டைரக்டர் செல்வ ராகவனின், பாசறை நடிகை என்ற வட்டாரத்திலிருந்து விடுபட்டு விட்டார் ஆண்ட்ரியா. அதன் விளைவாக, அவர் கையில், கமலின் - விஸ்வரூபம், சிம்புவின் - வடசென்னை, நந்தாவின் - திருப்பங்கள் ஆகிய படங்கள் உள்ளன. இப்படி, திடீரென்று தமிழில் பிசியாகி விட்டதால், சென்னையில் உள்ள ஒரு ஸ்டார் ஓட்டலில் நிரந்தரமாக தங்கியிருந்து, நடித்து வருகிறார். அதிர்ஷ்டம் ஆறாய் பெருகுகிறது!

எலீசா.

பிரச்னையில் வித்யா பாலன்!

த டர்ட்டி பிக்சர்ஸ் படத்தில், ஆபாசமாக நடித்திருந்த வித்யா பாலன் மீது, சில பெண்கள் அமைப்புகள் கோபம் கொண்டுள்ளன. அதோடு, ஐதராபாத் நீதிமன்றத் திலும் அவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இருப்பினும், 'நான் ஒன்றும் சட்ட விரோதமான செயலில் ஈடுபடவில்லையே... தணிக்கை குழுவின் அனுமதியோடு தானே, அப்படம் திரைக்கு வந்தது...' என்று, தில்லாக பேசி வருகிறார். தலைக்கு மேல் வெள்ளம் போகும் போது, சாண் போனால் என்ன, முழம் போனால் என்ன!

எலீசா.

சூப்பர் ஹீரோவாக ஜீவா!

இயக்குனர் மிஷ்கினுக்கு, காமிக்ஸ் கதைகள் என்றால் ரொம்ப பிடிக்கும். அதனால் தான், முகமூடி படத்தை, சூப்பர் ஹீரோ கதையாக வடிவமைத் திருப்பதாக சொல்கிறார். அதோடு, இப்படத்தில் ஜீவாவை, குங்பூ வீரராகவும் களமிறக்குகிறார். இரண்டு ஆண்டுகளாக ஜீவா,

குங்பூ பயிற்சி பெற்றவர் என்ற போதும், தன் சார்பிலும், பிரபல குங்பூ மாஸ்டரை நியமித்து, அவருக்கு பயிற்சி கொடுத்துள்ளார்.

சி.பொ.,

பாப்புலரான தனுஷ்!

'கொலை வெறி...' பாடலை பாடிய தனுஷ், உலக அளவில் பாப்புலராகி விட்டார். அதனால், சில மேலை நாட்டு இசையமைப் பாளர்களும் அவரை தங்கள் இசையில் பாட அழைப்பு விடுத்து உள்ளனர். இதனால், இன்ப அதிர்ச்சி அடைந்துள்ள தனுஷ், ஒரு பாடல் பாட, தனக்கு, 25 லட்ச ரூபாய் சன்மானம் தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

சினிமா பொன்னையா.

அவ்ளோதான்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us