தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/வெற்றி காரணிகள்!

வெற்றி காரணிகள்!

வெற்றி காரணிகள்!


PUBLISHED ON : ஜன 08, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 08, 2012


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கவிதைச்சோலை!

* என்னை தயவு கூர்ந்து

அவமானப்படுத்துங்கள்...

என் வெற்றி நாள்

எல்லாருக்கும்

உவமையாகட்டும்!

* என்னை புறந்தள்ளி

பேசுங்கள்...

அப்போது தான்

நான் உங்கள் அகத்தில்

நிரந்தர இடம் பிடிப்பேன்!

* என்னை அலட்சியப்படுத்துங்கள்...

அன்று முதல் நான்

லட்சியவாதிகளின்

முன் மாதிரியாவேன்!

* என்னை இழிவு படுத்துங்கள்...

அது என்னை

வலிமையுள்ளவனாக்கட்டும்!

* என்னை கேவலப்படுத்துங்கள்...

அது என் வாழ்வை

வளமாக்கப் பயன்படட்டும்!

* என் தோல்வியை

எள்ளி நகையாடுங்கள்...

அப்போது தான்

அதைவிட பலமான

கைத்தட்டல்களை

உங்களிடமிருந்து

பெற முடியும்!

* சரித்திரம் படைத்தவர்கள்

சாதிப்பதற்கு முன்

சந்தித்தவை தான் இவை!

* எவ்வளவு துயரங்களும்

கஷ்டங்களும் இடர்பாடுகளும்

இடை வருகிறதோ

அவ்வளவும்

வெற்றிக்கான ஆற்றலை

திகரிக்கும் உந்து சக்திகள்!

* ஆகவே என் மதிப்புக்குரியோரே...

என்னை திட்டுங்கள்

நான் திறம்படவே!

ந.ஏகம்பவாணன்,
சென்னை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us