தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இதப்படிங்க முதல்ல....

இதப்படிங்க முதல்ல....

இதப்படிங்க முதல்ல....


PUBLISHED ON : ஜன 22, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 22, 2012


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அப்துல் கலாமின் முதல் சினிமா நிகழ்ச்சி!

இதுவரை, எந்தவொரு சினிமா நிகழ்ச்சிகளிலும், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கலந்து கொண்டதில்லை. ஆனால், முதன்முறையாக, கிருஷ்ணவேணி பஞ்சாலை என்ற படத்தின் ஆடியோவை, இயக்குனர் மகேந்திரன் வெளியிட, கலாம் பெற்றுக் கொண்டார். கோவையிலுள்ள பஞ்சு மில்லில் வேலை செய்யும் தொழிலாளர்களின் பிரச்னையை மையமாக கொண்ட கதையில், இப்படம் உருவாகியிருப்பதால் தான், ஆடியோவை பெற்றுக் கொள்ள சம்மதித்ததாகவும் கூறியுள்ளார் அப்துல் கலாம்.

சினிமா பொன்னையா.

சிபாரிசு கேட்ட அனுயா!

மதுரை சம்பவம்,படத்தில் நடித்த அனுயா, நண்பன் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். அதனால், இப்படத்துக்கு பிறகு, தமிழில் தடுமாறிக் கொண்டிருக்கும் என் மார்க்கெட், சூடு பிடிக்கும் என்று சொல்லும் அனுயா, நண்பனில் நடித்த, விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் ஆகிய நடிகர்களிடம் சிபாரிசு கேட்டிருப்பதாக சொல்கிறார். பட்டது எல்லாம் பாடு; நட்டது எல்லாம் சாவி!

எலீசா.

விஷால் நடக்கும், சண்டக்கோழி-2

'மீண்டும், சண்டக்கோழி மாதிரி, என்னை வைத்து ஒரு படம் இயக்குங்கள்...' என்று, லிங்குசாமியை சில ஆண்டுகளாகவே கேட்டுக் கொண்டு வந்தார் விஷால். வேட்டை படப்பிடிப்பு முடியும் வரை, விஷாலுக்கு எந்த பதிலும் சொல்லாமல் இருந்த லிங்குசாமி, இப்போது, விஷாலை அழைத்து, ஒரு அதிரடி ஆக்ஷன் கதையை சொல்லி, கால்ஷீட்டும் வாங்கி விட்டார். அப் படம், சண்டக்கோழி-2 என்ற பெயரில் உருவாகிறது.

சி.பொ.,

ஜெயம் ரவி உருமாற்றம்!

அமீர் இயக்கத்தில் நடித்துள்ள, ஆதிபகவன் படத்தை ரொம்பவே எதிர்பார்க்கிறார் ஜெயம் ரவி. இதில், முதன் முறையாக, தான் இரட்டை வேடத்தில் நடித்திருப்பதாக சொல்லும் அவர், ஒரு வேடத்துக்கும், இன்னொரு வேடத்துக்கும் துளியும் சாயல் இருக்கக் கூடாது என்பதற்காக, தன் பர்பாமென்ஸ் மட்டுமின்றி, உடற் கட்டையும், உடற்பயிற்சி செய்து, உரு மாற்றியதாக சொல்கிறார்.

சி.பொ.,

த்ரிஷாவின் எதிர் கேள்வி!

த்ரிஷாவுக்கு வயதாகி விட்டதால், அவரு டன் நடிக்க, சில நடிகர்கள் தயங்குவதாக, செய்திகள் வெளியாகி உள்ளன. ஆனால், இந்த செய்தியை மறுக்கிறார் த்ரிஷா. மேலும், 'ஐஸ்வர்யா ராய், 36 வயதில் கதாநாயகியாக நடித்தார். ஸ்ரீதேவி இதை விட கூடு தலான வயதில், கதாநாயகியாக நடித்தார். அவர் களோடு ஒப்பிடும் போது, தற்சமயம், 29 வயதே ஆகும் நான், கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லை...' என் கிறார். படுவது பட்டும் பட்டத்துக்கு இருக்க வேண்டும்!

எலீசா.

பெண் தீவிரவாதி ஹன்சிகா!

வேலாயுதத்தை தொடர்ந்து, ஹன்சிகா மோத்வானி நடிக்கும் படம், வேட்டை மன்னன். இதில், சிம்புவுக்கு ஜோடியாக, தீக்ஷா சேத் நடிக்கிறார். 'அப்படியென்றால், ஹன்சிகாவுக்கு என்ன வேடம்?' என்று கேட்ட போது, இதில், பெண் தீவிரவாதி வேடத்தில் அவர் நடிக்கிறாராம். இதற்காக, தன் பாடி லாங்குவேஜ், ஹேர் ஸ்டைல் ஆகியவற்றை முற்றிலுமாக மாற்றி, 'ரப் அண்ட் டப்' ஆக நடிக்கிறார். கூத்துக்கு ஏற்ற கொட்டுக் கொட்டுகிறது!

எலீசா.

கூட்டணியை முறித்த செல்வராகவன்!

யுவன் ஷங்கர் ராஜாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன படங்களில், ஜி.வி.பிரகாஷை இசையமைக்க வைத்தார் செல்வ ராகவன். ஆனால், அந்த இரண்டு படங்கள் தோல்வியடைந்ததால், இப்போது, ஜி.வி.பிரகாஷûடனான கூட்டணியை முறித்துக் கொண்ட செல்வராகவன், அடுத்து இயக்கும், இரண்டாம் உலகம் படத்துக்கு, ஹாரிஸ் ஜெயராஜை இசையமைக்க வைத்துள்ளார்.

சி.பொ.,

இந்தியில் ரீமேக் ஆகும் கோ!

கே..வி.ஆனந்த் இயக்கத்தில், ஜீவா நடித்த, கோ படம், இந்தியில் ரீ-மேக் ஆகிறது. இதன் இந்தி உரிமையை வாங்கியுள்ள அமிதாப்பச்சன், தன் மகன் அபிஷேக் பச்சனிடம் இதில் நடிக்க, 'கால்ஷீட்' கேட்டிருக்கிறார். இதை அறிந்து, இந்தி பதிப்பிலும், தான் நாயகியாக நடிக்க, தீவிர முயற்சி எடுத்து வருகிறார் கார்த்திகா. பட்டறை வாய்த்தால் பணி வாய்க்கும்!

எலீசா.

அவ்ளோதான்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us