தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...


PUBLISHED ON : மார் 25, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 25, 2012


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விடுதலைப் புலியாக ஜான் ஆபிரகாம்!

யாழ்ப்பாணம், விடு தலைப் புலிகளின் கட்டுப் பாட்டில் இருந்த போது, அங்கே இருந்த ஒரு விடுதலைப் புலியின் துன்பம் மற்றும் தியாகம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, ஒரு படத்தை இந்தியில் இயக்கி நடிக்கிறார் ஜான் ஆபிரகாம். கன்னத்தில் முத்த மிட்டால் படத்தில், மணி ரத்னம் சொல்லத் தவறிய சில முக்கிய தகவல்களையும் இப்படத்தில் சொல்லியிருக் கிறார். இலங்கைக்கு உலக நாடுகள் கெடுபிடி கொடுத்து வரும் இவ்வேளையில், விடு தலைப் புலிகள் கதையில், ஒரு இந்திய படம் உருவாவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சினிமா பொன்னையா.

இளையராஜா இசையில் தாமரை!

தொடர்ச்சியாக கவுதம் மேனன் இயக்கும் படங்களில், பாடல் எழுதி வரும் கவிஞர் தாமரைக்கு, இளைய ராஜாவின் இசையில் பாடல் எழுத வேண்டும் என்ற ஆசை மட்டும் நிராøŒயாக இருந்தது. இப்போது, அதே கவுதம் மேனன் இயக்கும், நீ தா@ன என் பொன் வசந்தம் என்ற படத்தின் மூலம், அந்த ஆசை நிறைவேறி விட்டது. அப்படத்தில் இளையராஜாவின் இசையில், ஆறு பாடல்கள் எழுதியுள்ளார் தாமரை. நினைத்ததும், கறி சமைத்ததும்!

எலீசா.

குழப்பத்தில் விஷால்!

மசாலா கபே படத்தை இயக்கி வரும் சுந்தர்.சி, அடுத்து விஷாலை வைத்து ஒரு படம் இயக்குகிறார். இப்படத்தில் முதன்முறையாக மூன்று வேடங்களில் விஷால் நடிக்க, முக்கிய வேடத்தில் ஸ்ருதி ஹாசன் நடிக்கிறார். ஏழாம் அறிவு படத்தை போன்ற இக்கதையில், ஸ்ருதிக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார் சுந்தர்.சி என்பதை அறிந்து

குழம்பி போயிருக்கிறார் விஷால்.

சி.பொ.,

விக்ரமை இயக்கும் பாண்டிராஜ்!

மெரீனா படத்தை இயக்கிய பாண்டிராஜ், அடுத்து விக்ரமை வைத்து ஒரு படம் இயக்குகிறார். காதல் மற்றும் காமெடி கலந்த கதையில் அப்படம் உருவா கிறது. அதைத் தொடர்ந்து, பசங்க, மெரீனா போன்று, மீண்டும் சிறுவர்களை மையமாக வைத்து, இன்னொரு படமும் இயக்க இருக்கும் பாண்டிராஜ், அதில் சர்வதேச அளவிலான, சிறுவர்களின் பிரச்னையை படமாக்குகிறார்.

சி.பொ.,

த்ரிஷாவுடன் மோதும் அனுஷ்கா - காஜல்!

தெலுங்கு, பாடிகார்ட் படத்தின், வெற்றி காரணமாக வீழ்ந்து கிடந்த த்ரிஷாவின் மார்க்கெட் நிமிரத் துவங்கியுள்ளது. இதன் காரணமாக, த்ரிஷாவுக்கான சில படங்களை கைப்பற்றி விட்ட அனுஷ்கா மற்றும் காஜல் அகர்வால் இருவரும் உஷாராகி விட்டனர். த்ரிஷா, மேலும் வளர்ந்தால், தங்களுக்கு தான் பாதிப்பு என்று, அவர் பக்கம் திரும்பி நிற்கும் ஜுனியர் என்.டி.ஆர்., நாக சைத்தன்யா ஆகிய ஹீரோக்களின் படங்களை, தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஏட்டிக்குப் போட்டி, எகனைக்கு மொகனை.

எலீசா.

தமிழுக்கு வரும் வித்யா பாலன்!

சில்க் ஸ்மிதாவின் கதையில் உருவான, த டர்ட்டி பிக்சர்ஸ் படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்த சந்தோஷத்தில் உள்ள வித்யா பாலனுக்கு, இப்போது தமிழ் நாட்டிலும் நிறைய ரசிகர்கள் கிடைத்துள்ளனர். அதனால், நேரடி தமிழ் படங்களில் நடிக்க விரும்பும் அவர், மும்பைக்கு செல்லும், இங்குள்ள இயக்குனர்களை சந்தித்து, சான்ஸ் கேட்கிறார். இந்த சேதி, கோலிவுட் கிளாமர் ஹீரோயினிகளுக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. காற்றுக்குத் தகுந்தாற் போல் பாயை மாற்றிக் கட்டு!

எலீசா.

அரசியலுக்கு வருகிறார் வடிவேலு!

'நடிகர்களுக்கு அரசியல் தேவையா?' என்று வடிவேலுவை கேட்டால், 'ஜனநாயக நாட்டில், யார் விரும்பினாலும் அரசியலுக்கு வரலாம். மேலும், ஒரு நாள் கண்டிப்பாக நான் அரசியலுக்கு வருவேன். யாருக்கும் பயந்து ஓடிவிட மாட்டேன்' என்பவர், 'திரையுலகை விட்டு என்னை ஓரங்கட்டி விட்டதாக சொல்கின்றனர்; அதை உடைத்தெறிய, விரைவில் நான் ஹீரோவாக நடிக்கும் படத்தின் அறிவிப்பு வெளியாகும்...' என்கிறார் வடிவேலு.

சினிமா பொன்னையா.

அவ்ளோதானே!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us