தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/எவரெஸ்ட்டில் ஏறிய, முதல் வயதான பெண்!

எவரெஸ்ட்டில் ஏறிய, முதல் வயதான பெண்!

எவரெஸ்ட்டில் ஏறிய, முதல் வயதான பெண்!


PUBLISHED ON : ஜூலை 17, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 17, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பிரேமலதா அகர்வால். 45 வயதாகும் இவர், இரண்டு பெண்களுக்கு தாய். இவரது மூத்த பெண்ணுக்கு திருமணமாகி விட்டது. எப்போது வேண்டுமானாலும், பாட்டி என்ற அந்தஸ்து கிடைக்கலாம். சரி... இந்த விவரம் எல்லாம் எதற்காக என்கிறீர்களா?

இளைஞர்கள் பலர், ஏற முயன்று முடியாமல் உயிரை கொடுத்துள்ள, உலகின் உயரமான எவரெஸ்ட் சிகரத்தில், இந்த வருடம், மே 11ம் தேதி, ஏறி சாதனை படைத்துள்ளார். அந்த வகையில், எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய இந்தியாவின் வயதான பெண் என்ற சாதனையையும் பெற்றுள்ளார்.

இத்தனைக்கும் இவர் எவரெஸ்ட் சிகரம் ஏறும் போது ஏற்பட்ட சோதனைகள் ஏகப்பட்டவை.

எவரெஸ்ட் சிகரம் ஏறுவதற்காக அடிவாரத்தில் குழுமிய போது, இவரது குழுவில் இடம் பெற்றிருந்தவர்கள், இவரை கிண்டலும், கேலியும் செய்துள்ளனர். ஒரு சிலர், 'ஏன் இந்த வீண் முயற்சி; பேசாமல் இப்படியே திரும்பி விடுங்கள்...' என்று சொல்லி, எச்சரித்துள்ளனர்; ஆனால், அப்படிச் சொன்னவர்கள்தான் ஒரு கட்டத்திற்கு மேல் ஏற முடியாமல் திரும்பி விட்டனர். 23 ஆயிரம் அடிக்கு மேல் காற்று கிடையாது, செயற்கை சுவாசம்தான் துணை. இந்த செயற்கை சுவாசத்தின் துணையோடு, மேலும் 6,000 அடி ஏற வேண்டும்.

இன்னும் கொஞ்சம் உயரம் போனதும் மைனஸ், 100 - 150 டிகிரி வரை குளிர் காணப்படும். இவர் போன போது, உச்சபட்ச குளிர் நிலவியது.

இன்னும் கொஞ்ச தூரத்தில் சிகரத்தை தொடப் போகிறோம் என்ற நிலையில், கையில் இருந்த கையுறை கழண்டு விழுந்து, காணாமல் போனது. எலும்பையே உருக்கும் குளிருக்கு முன், விரல்கள் எம்மாத்திரம் என்ற நிலையில், திரும்ப கையுறை கிடைக்கப் பெற்றார்.

இப்படிப்பட்ட சோதனைகளை எல்லாம் தாண்டி, எவரெஸ்ட் சிகரத்தை தொட்டு திரும்பி இருக்கிறார்.

இவர், நாற்பது நாள், ஒட்டகத்திலேயே பாலைவனப் பயணம் மேற்கொண்டு, 'லிம்கா' உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.

இவரது பொழுதுபோக்கே மலை ஏறுவதுதான், எவரெஸ்ட் சிகரம் ஏற வேண்டும் என்பது இவரது கனவாக இருந்தது. அந்தக் கனவு நிறைவேற, நிறைய செலவு செய்ய வேண்டும். பின்தங்கிய ஜார்கண்ட் மாநிலத்தின் ஜாம்ஷெட்பூரைச் சேர்ந்த சாதாரண குடும்பத் தலைவியான இவருக்காக, செலவு செய்ய இப்போதுதான், டாடா ஸ்டீல் நிறுவனம் முன் வந்தது. இதையடுத்து, இப்போது அவரது கனவு நனவாகியுள்ளது.

சாதனை செய்ய வயது ஒரு தடையில்லை என்று நிரூபித்துள்ள இவர், இப்போது சாதனைப் பெண் மட்டுமல்ல, எவரெஸ்ட் சிகரத்தின் சரித்திரத்திலும் இடம் பெற்ற பெண்ணாகி விட்டார்.

***

இமயமலையில், 29 ஆயிரத்து, 28 அடி உயரத்தில் உள்ளது எவரெஸ்ட் சிகரம்.

*சாதனை செய்பவர்களுக்கு மிகவும் சவாலான விஷயம், இந்த சிகரத்தை தொடுவதுதான்.

*இந்த சாகச பயணத்தில் இதுவரை, 216 பேர் உயிரிழந்துள்ளனர்.

*மே 29, 1953ல் தான், முதன் முதலாக டென்சிங் மற்றும் ஹிலாரி ஆகியோர் இந்த சிகரத்தில் ஏறி, சாதனை படைத்தனர்.

***

எம். பசுபதி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us