தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/படக்கதை வடிவில் எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாறு!

படக்கதை வடிவில் எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாறு!

படக்கதை வடிவில் எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாறு!


PUBLISHED ON : ஜூலை 17, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 17, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காலஞ்சென்ற இசைக்குயில், எம்.எஸ்.சுப்புலட்சுமி யின் வாழ்க்கை வரலாறு, 'பிக்சர்ஸ் ஆப் மெலடி - எம்.எஸ்.சுப்புலட்சுமி' என்ற தலைப்பில், ஆங்கிலத்தில் படக்கதையாக வெளிவந்துள்ளது. ஒரு பிரபலத்தின் வாழ்க்கை வரலாறு, படக்கதை வடிவில் வெளி வந்திருப்பது இதுவே முதல் முறை. இதற்கு வசனம் எழுதியிருப்பவர் ஸ்வாதி சாப்ட் சொல்யூஷன்ஸ் நிறுவனத் தலைவரான லட்சுமி தேவநாதன். புத்தகத்தின் அட்டை படத்தை ஓவியர் அரசும், உள்ளே இடம்பெற்றுள்ள படங்களை ஓவியர் ஜி.சேகரும் வரைந்துள்ளனர்.

எம்.எஸ்.சுப்புலட்சுமியின் வாழ்வில் நடந்த மறக்க முடியாத சம்பவங்களை, ஓவியங்களாக கண் முன் கொண்டு வந்துள்ளனர். எம்.எஸ்.சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாற்றை, 24 பக்கங்களில், ஸ்வாதி சாப்ட் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தினர் வெளியிட்டுள்ளனர். இப்புத்தகத் தின் விலை, 125 ரூபாய்.

புத்தகம் பெற தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி: 91-44-42316060.

email: solutions@swathigroup.com

— ஜோல்னா பையன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us