தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இதப் படிங்க முதல்ல...

இதப் படிங்க முதல்ல...

இதப் படிங்க முதல்ல...


PUBLISHED ON : டிச 03, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 03, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'பஞ்ச் டயலாக்' நடிகரான விக்ரம்!

கதைகளுக்கேற்ப தன் பாடி லாங்குவேஜை மாற்றி நடிப்பவர், விக்ரம். தற்போது, ஸ்கெட்ச் படத்தில், வடசென்னை தாதாவாக நடிக்கிறார். இதுவரை, தன் படங்களில், 'பஞ்ச் டயலாக்' பேசாதவர், இப்படத்தில், 'ஸ்கெட்ச் பண்ணினா, ஸ்கெட்ச் மிஸ் ஆகாது; அப்படி மிஸ் ஆனா சொல்லு, அந்த ஸ்கெட்சை, ஸ்கெட்ச் பண்ணி அடிக்கிறேன்...' என்று, 'பஞ்ச் டயலாக்' பேசியுள்ளார்.

— சினிமா பொன்னையா

மெச்சூரிட்டியான வேடங்களில் நஸ்ரியா!

நேரம், ராஜா ராணி மற்றும் நைய்யாண்டி உட்பட பல படங்களில் நடித்த மலையாள நடிகை நஸ்ரியா, மலையாள நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்த பின், நடிப்பை விட்டு விலகியிருந்தார். ஆனால், தற்போது அஞ்சலிமேனன் இயக்கத்தில், பிருத்விராஜ் நடிக்கும் படத்தில் மீண்டும் நடிக்க வருகிறார். இத்தகவலை, தன் இணையதளப் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ள நஸ்ரியா, 'திருமணத்திற்கு பின் மெச்சூரிட்டியாகி விட்ட நான், இனிமேல் மெச்சூரிட்டியான வேடங்களில் மட்டுமே நடிப்பேன்...' என்று தெரிவித்துள்ளார். தன் காரியம் என்றால், தன் சீலையும் பதைக்கும்!

— எலீசா

சன்னி லியோனைத் தொடர்ந்து இன்னொரு ஆபாச நடிகை!

கனடாவில் ஆபாச படங்களில் நடித்தவர், சன்னிலியோன். அதையடுத்து பாலிவுட் சினிமாக்களில் நடித்து, இந்திய அளவில் புகழ்பெற்று விட்டார். அவரைத் தொடர்ந்து இப்போது லெபனான் நாட்டைச் சேர்ந்த மாடல் அழகி, மியா கலிபா என்பவரும், பாலிவுட் சினிமாவில் என்ட்ரி கொடுத்துள்ளார். இவர் அமெரிக்காவில் வெளியான பல ஆபாச படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. திக்குக் கெட்டு திசை மாறிப் போகிறது!

எலீசா

சந்தானத்துடன் இணைந்த ஐந்து நடன மாஸ்டர்கள்!

சந்தானம் நடித்துள்ள, சக்க போடு போடு   ராஜா படத்திற்கு, இசையமைத்துள்ளார்,

சிம்பு. இப்படத்தில், 'கலக்கு மச்சான்...' என்றொரு பாடலை, பாடியுள்ளார், இசையமைப்பாளர் அனிருத். சந்தானத்தின் ஓப்பனிங் பாடலான இந்த பாடலில், சந்தானத்துடன் இணைந்து ராஜு சுந்தரம், ஸ்ரீதர், தினேஷ், நோபல், ஜானி ஆகிய ஐந்து நடன மாஸ்டர்களும் நடனமாடியுள்ளனர்.

— சினிமா பொன்னையா

கறுப்பு பூனை!

அட்டகத்தி நடிகைக்கு புதிதாக படவாய்ப்புகள் இல்லை. அதனால் சில தயாரிப்பாளர்களை சந்தித்து கேரக்டர் வேடங்களில் நடிக்க, 'சான்ஸ்' கேட்டு வருகிறார். அத்துடன், இதுவரை பெங்களூரில் இருந்து சென்னை வரும்போதெல்லாம் சில பாடிகார்டுகளுடன் விசிட் அடித்தவர், இப்போது தன்னந்தனியாக வந்து ரகசிய சந்திப்புகளை நிகழ்த்தி, படவேட்டை நடத்துகிறார்.

கதைக்கு அவசியப்பட்டால் கூட கிளாமராக நடிக்க மாட்டேன் என்று கடும் கண்டிஷன் போட்டு, நடித்து வரும் மலர் டீச்சர் நடிகை, திருமணமான நடிகர் ஒருவருடன் நெருங்கி பழகி வருவதாக ஒரு செய்தி பரவியுள்ளது. இதுபற்றி எந்தவித பதிலும் சொல்லாமல் மவுனம் சாதிக்கிறார், நடிகை.

லண்டன் பாய் பிரண்டுடன் படப்பிடிப்பு தளங்களுக்கு விசிட் அடிக்கும் மதராசப்பட்டினம் நடிகை, ஸ்பாட்டிலேயே பாய் பிரண்டுகளுடன் லுாட்டி அடிப்பதால், சில இந்திப்பட இயக்குனர்கள், பாய் பிரண்டுடன் ஸ்பாட்டுக்குள் வருவதற்கு நடிகைக்கு தடை விதித்துள்ளனர்.

சினி துளிகள்!

* கரு படத்தை அடுத்து, தனுஷின் மாரி-2 படத்தில் நடிக்கிறார், சாய் பல்லவி.

* மும்பையில் வீடு வாங்கி குடியேறியுள்ளார், எமிஜாக்சன்.

* வணங்காமுடி படத்தில், கிளாமர் ரோலில் நடித்துள்ளார், அட்டகத்தி நந்திதா.

அவ்ளோதான்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us