PUBLISHED ON : ஜூலை 21, 2019

அ நிறம் | அளவு
நாட்டில், ஜனநாயகம் உள்ள வரை, இமாச்சல் பிரதேசத்தைச் சேர்ந்த, சியாம் சரண் நேகி என்ற, 103 வயது முதியவரை மறக்க முடியாது.
'கல்பா சென்ட்ரல் பள்ளியில் ஆசிரியராக இருந்தபோது, இவர் வயது, 35. இந்தியாவில் நடைபெற்ற முதல் தேர்தலில் போட்ட ஓட்டு, இவருடையது தான்...' என்கிறது, புள்ளி விபரம்.
கடந்த, 17 லோக்சபா தேர்தல்களிலும், சட்டசபை, இடை தேர்தல்களிலும் ஓட்டு போட்ட, சியாம் சரண், 'இன்னும், பல பொது தேர்தல்களில் ஓட்டு போட வேண்டும் என்பது தான், என் ஆசை...' என்கிறார்.
— ஜோல்னாபையன்.
