
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புன்னகை அரசி, மோனாலிசா ஓவியத்தை வரைந்தவர், லியோனார்டா டாவின்சி. இந்த மென்மையான புன்னகை அரசி ஓவியத்தை வரைந்ததால், அவரை, ரொம்ப மென்மையானவர் என்று, நினைத்து விட வேண்டாம். யுத்த காலத்தில், பீரங்கிக்குள் விஷக் கிருமிகளை திரட்டி வைத்து, எதிரி நாட்டில், பீரங்கி மூலம் வீசி எறியும் யுத்த கால போர் முறையை, அவர் தான் கண்டுபிடித்தார்.
அதற்கு முன், அழுகிய பிராணிகளிலிருந்து உற்பத்தியாகும் நோய் கிருமிகள் தாக்கி, எதிரி அழிய வேண்டும் என்பதற்காக இறந்த பிராணிகளின் அழுகிய உடலை, பலசாலி வீரர்கள் சுமந்து சென்று, எதிரி நாட்டுக்குள் வீசி எறிந்து கொண்டிருந்தனர். இதற்கு, சுருக்கு வழியாக, கிருமிகளை மட்டும், பாட்டிலில் அடைத்து, பீரங்கிக் குண்டு போல எறிவதை கண்டுபிடித்தார் டாவின்சி.
— பாக்கியம் ராமசாமி