PUBLISHED ON : ஜன 05, 2014

நீச்சலடிப்பதில், சிலருக்கு அலாதி பிரியம் உண்டு. 'டப்பு' அதிகம் இருப்பவர்கள், தங்கள் வீடுகளிலேயே, சிறிய அளவில், நீச்சல் குளங்களை அமைப்பது வழக்கம். அதனால், இதுபோன்ற நீச்சல் பிரியர்களின் வசதிக்காகவே, தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான, சிலியில், பிரமாண்ட நீச்சல் குளத்தை அமைத்துள்ளனர்.
இந்த நீச்சல் குளத்தை நேரில் பார்ப்பவர்கள், 'இதை, பிரமாண்டம் என்ற சாதாரண வார்த்தையில் கூறி, அதன் பெருமையை குறைத்து விட வேண்டாம். இது, அதற்கும் மேலே...' என, பில்டப் கொடுக்கின்றனர். உலகிலேயே, மிகப் பெரிய நீச்சல் குளம் என்ற பெருமை, இதற்கு உள்ளது. சிலியின், அல்கார்போ என்ற நகரில், கடற்கரை ஓரத்தில், 80 ஏக்கர் நிலப் பரப்பில், 3,000 அடி நீளத்தில் அமைந்துள்ள, இந்த நீச்சல் குளத்துக்காக, தினமும், 25 கோடி லிட்டர், தண்ணீர் நிரப்பப்படுகிறது. இந்த நீச்சல் குளத்தை பராமரிப்பதற்கு மட்டும், ஆண்டுக்கு, 30 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது.
— ஜோல்னாபையன்.

