தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாத உணவுப் பொருட்கள்...

வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாத உணவுப் பொருட்கள்...

வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாத உணவுப் பொருட்கள்...


PUBLISHED ON : பிப் 13, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 13, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* சோடா பானம் - சோடாவில், 'கார்போனேட் ஆசிட்' அதிகம் இருப்பதால், இவற்றை வெறும் வயிற்றில் குடித்தால், வயிற்றிலுள்ள அமிலத்துடன் கலந்து, குமட்டல் மற்றும் அசவுகரியத்தை ஏற்படுத்தும்

* தக்காளி - வெறும் வயிற்றில் தக்காளியை சாப்பிடக் கூடாது. அதிலுள்ள அமிலமானது, இரைப்பையில் சுரக்கும் அமிலத்துடன் இணைந்து, கரைய முடியாத, 'ஜெல்'லை உருவாக்கி விடும். அதனால், வயிற்றில் கற்களை கூட உருவாக்கும்

* மாத்திரைகள் - எப்போதுமே மாத்திரைகளை வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது. ஏனெனில், வயிற்றில் உள்ள படலத்தை அரிப்பதோடு, வயிற்று அமிலத்துடன் கலந்து, உடலில் பல கோளாறுகளை ஏற்படுத்தி விடும்

* ஆல்கஹால் - பொதுவாக ஆல்கஹால் ஆரோக்கியமற்றது. அதிலும் அதை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், அதிலுள்ள சேர்மங்கள், வயிற்றுப் படலத்தில் எரிச்சலை ஏற்படுத்தும். இப்படியே நீடித்தால், வயிற்றுப்படலம் அரிக்கப்பட்டு, மிகுந்த அபாயத்திற்கு உள்ளாகக்கூடும்

* காரமான உணவுகள் - எப்போதுமே வெறும் வயிற்றில் கார உணவுகளை உட்கொள்ளக் கூடாது. வயிற்றிலுள்ள அமிலத்துடன் காரம் சேர்ந்து, வயிற்றில் கடுமையான எரிச்சலை ஏற்படுத்துவதோடு, பிடிப்புக்களையும் ஏற்படுத்தும்

* காபி மற்றும் டீ - மிகவும் ஆபத்தான ஒரு பானம். இதை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், அதிலுள்ள காபின் நஞ்சு, தீவிரமான பிரச்னைக்கு ஆளாக்கி விடும். எனவே, ஒரு டம்ளர் தண்ணீர் குடித்தபின், காபி குடிக்கும் பழக்கத்தை மேற்கொள்ளுங்கள்

* தயிர் - தயிரில் நல்ல பாக்டீரியா இருந்தாலும், வயிற்றுப் படலத்துடன் சேர்ந்து வினைபுரிந்து, வயிறு உப்புசத்தை ஏற்படுத்தி விடும்

* வாழைப்பழம் - வாழைப்பழத்தில் மக்னீசியம் அதிகம் இருப்பதால், காலையில் வெறும் வயிற்றில் உட்கொண்டால், மக்னீசியம் உடலில் அதிகரித்து, கால்சியம் மற்றும் மக்னீசியத்தில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படக்கூடும். எனவே, எக்காரணம் கொண்டும் வாழைப் பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிடாதீர்.

தொகுப்பு: ஏ.எஸ்.கோவிந்தராஜன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us