PUBLISHED ON : பிப் 11, 2018

பிரிட்டன் அரச குடும்பத்தின் விளையாட்டு பிள்ளையான, இளவரசர் ஹாரிக்கு, ஒரு வழியாக திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டு விட்டது.
அமெரிக்காவைச் சேர்ந்த, 'டிவி' நடிகை, மெகன் மார்கெல் தான், பிரிட்டன் அரச குடும்பத்தின் அதிகாரப்பூர்வ இல்லமான, பக்கிங்ஹாம் அரண்மனையில் விளக்கேற்றப் போகும், அடுத்த மருமகள்.
ஹாரிக்கு, 33 வயதாகிறது; ஆனால், மார்கெல்லுக்கு வயது, 36. இவர், நடிகை என்பதால், அவரை மருமகளாக ஏற்பதற்கு, அரச குடும்பத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது.
ஆனால், ஹாரி, பிடிவாதமாக இருந்ததால், வேறு வழியில்லாமல், பச்சைக் கொடி காட்டி விட்டனர். மே மாதம், திருமணம் நடக்கவுள்ளது.
'எங்க அம்மா டயானாவுக்கும், அப்பா, சார்லசுக்கும் எப்படி பிரமாண்டமாக திருமணம் நடந்ததோ, அதேபோல், எனக்கும் பிரமாண்டமாக திருமணம் நடக்க வேண்டும்...' என, தன் பாட்டி, எலிசபெத்திடம், கறாராக கூறி விட்டார், ஹாரி.
— ஜோல்னாபையன்.
