தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/கவிச்சோலை - மாற்றம்

கவிச்சோலை - மாற்றம்

கவிச்சோலை - மாற்றம்


PUBLISHED ON : பிப் 20, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 20, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* சொற்ப இரண்டு நாட்களில்

நாளை என்பது கூட

நேற்றாகி விடுகிறது!

* பருவச் சுழற்சியில்

மகளாயிருந்தவள்

தாயாகவும் ஆகிறாள்!

* காலச் சுழற்சியில்

அமாவாசை கூட

பவுர்ணமி ஆகிறது!

* இயற்கைச் சுழற்சியில்

அருவிகள் தான்

நதிகளாகின்றன!

* கடற்பரப்பில்

மழைத்துளிகள் கூட

முத்துக்களாகின்றன!

* அடைபட்டுப்போன

கூட்டுப்புழு கூட

வண்ணத்துப் பூச்சியாகிறது!

* விதை மரமாகவும்,

மரம் விதையாகவும்

மாறித்தானே ஆகும்!

* வசந்தம் என்பதும்

வாழ்க்கைப் பரப்பில்

வராமலா போகும்!

— இளசை சுந்தரம், மதுரை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us