PUBLISHED ON : பிப் 20, 2011

உ.பி., மாநிலம், முசாபர் நகர் மாவட்டத்தில், பென்ஸ்வால் என்ற கிராமத்தில், கிராம பஞ்சாயத்தில் நூதன தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி, இந்த கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் யாரும் ஜீன்ஸ் உடைகளை அணியக் கூடாது. 'பெண்கள் ஜீன்ஸ் அணிந்தால், அவர்களை ஆண்கள் கிண்டல் செய்வர். பெண்களை வசீகரமாக காட்டும்; அதன் மூலம் பெண்கள் காதல் வசப்படுவர். காதல் திருமணங்களை தடுக்க, பெண்கள் ஜீன்ஸ் அணியக் கூடாது...' என, இந்த கிராம பஞ்சாயத்து கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். 'இதே போல் தீர்மானத்தை சுற்றுபத்து கிராம பஞ்சாயத்துக்களும் நிறைவேற்ற வேண்டும்...' என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.கிராமத்தின் இந்த கட்டுப்பாட்டை கண்காணிக்க, ஐந்து பெண்கள் அடங்கிய குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்த பெண்கள், வெளியூர் செல்லும் போது, எங்காவது ஜீன்ஸ் அணிந்தபடி தென்பட்டால், அவர்களுக்கு கிராம பஞ்சாயத்தில் கடும் தண்டனை வழங்கப்படும்.— ஜோல்னா பையன் 

