PUBLISHED ON : பிப் 20, 2011

கிரீஸ் நாட்டு தலைநகர் ஏதன்ஸ் நகர விமான நிலையத்தில், ஒரு சாமியார், மண்டை ஓட்டுடன் கைது செய்யப்பட்டார். சைப்ரஸ் நாட்டைச் சேர்ந்த அந்த சாமியாரின் பெட்டியில், ஒரு மண்டை ஓடு இருந்ததை விமான நிலைய அதிகாரிகள், சோதனையின் போது பார்த்தனர். 'அது ஒரு பெண் கன்னியாஸ்திரியின் மண்டை ஓடு. அந்த பெண், நான்கு ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். அவர் ஒரு புனிதர். எனவே, அவர் நினைவாக, புனிதப் பொருளாக அந்த மண்டை ஓட்டை எடுத்துச் செல்கிறேன்...' என்று அந்த சாமியார் கூறினார். கிரீஸ் நாட்டில் பழமைவாத கிறிஸ்தவ மதத்தினர், புனிதர்களின் எலும்பு கூடுகளை பத்திரப்படுத்தி வைப்பது வழக்கம். எனினும், எந்த கன்னியாஸ்திரியும், புனிதராக அறிவிக்கப்படாத நிலையில், அந்த சாமியாரிடம் இருந்து மண்டை ஓடு கைப்பற்றப்பட்டுள்ளது புதிராக உள்ளது. அந்த சாமியாரின் பெயரை அதிகாரிகள் வெளியிட மறுத்து விட்டனர். —  ஜோல்னா பையன். 

