தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/கவிச்சோலை!

கவிச்சோலை!

கவிச்சோலை!


PUBLISHED ON : மே 29, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 29, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நினைவு துடிப்பு!

* உன் அன்பு நதியானால்

உயிரை கரைத்து

விடுகிறேன்!

* உன் இதயம் கடலானால்

நானே மூழ்கி விடுகிறேன்!

* என் கனவுகளை

காப்பாற்றி விடுவதற்காவது

பிரிவை பிரிந்து விடு!

* என் கற்பனைகளை

அர்ப்பணம் செய்திருப்பது

உன் காலடியில்தான்!

* ஆசை அலைகள்

அடித்துக் கொண்டேயிருக்கின்றன

ஆறுதல் கரையில்!

* திரும்பவும் திரும்பிவரும்

அலையாய்...

நீ வரவே

நினைத்து வாழ்கிறேன்!

* நினைவில் ஒரு ஓரத்தில்

கேட்கும் இதயத் துடிப்பாய்...

உன் பெயரை

உச்சரித்துக் கொண்டிருக்கிறேன்...

உன் வரவு

காதல் வரவாகட்டும்!

— தமிழ்நாயகி, சேலம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us