தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/விபத்து இல்லாமல் கார் ஓட்டி சாதனை!

விபத்து இல்லாமல் கார் ஓட்டி சாதனை!

விபத்து இல்லாமல் கார் ஓட்டி சாதனை!


PUBLISHED ON : மே 29, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 29, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நூறு வயதான நபர் ஒருவர், எண்பது ஆண்டுகளாக விபத்தே இல்லமால், கார் ஓட்டி சாதனை படைத்துள்ளார். அவரது இந்த சாதனையை பாராட்டி, அவருக்கு இன்சூரன்ஸ் நிறுவனம், பிரிமியம் தொகையில் தள்ளுபடி வழங்கியுள்ளது.

பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த இந்த டிரைவரின் பெயர் சிரில் டெலாகு. எண்பது ஆண்டுகளாக கார் ஓட்டி வருகிறார். தினமும், காரை எடுத்துக் கொண்டு கடைக்கு செல்வார்; மீன் மார்க்கெட்டிற்கு செல்வார். 'நான் கார் ஓட்டும் போது, மணிக்கு, 40 கி.மீ., வேகத்திற்கு மேல் செல்ல மாட்டேன். என் பாதுகாப்புதான் எனக்கு முக்கியம். எனக்கு, 110 வயது ஆகும் வரை கார் ஓட்டுவேன்...' என்கிறார். இவருக்கு இன்சூரன்ஸ் தொகையில் எவ்வளவு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது என்பதை தெரிவிக்க, அந்நிறுவனம் மறுத்து விட்டது. எனினும், எண்பது ஆண்டுகளாக விபத்து காப்பீடு கேட்டு, மனுவே செய்யாததால், அதற்கு பரிசு நிச்சயம் உண்டு என்று மட்டும் அறிவித்துள்ளது.

— ஜோல்னா பையன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us