PUBLISHED ON : ஜூலை 31, 2016

அ நிறம் | அளவு
ஓட்டுகளை வாங்குவதற்காக, இலவசங்களை அள்ளி வீசும், நம் அரசியல்வாதிகளின் கலாசாரம், மற்ற நாடுகளுக்கும் பரவத் துவங்கி விட்டது.
உலக வல்லரசான அமெரிக்காவில், தற்போதைய அதிபர் ஒபாமாவின் பதவிக் காலம் முடிவடைவதை அடுத்து, புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல், நவம்பரில் நடைபெற உள்ளது. இதில், ஜனநாயக கட்சி சார்பில், முன்னாள் அதிபர் பில் கிளிண்டனின் மனைவி ஹிலாரி போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர், தான் அதிபராக தேர்வு செய்யப்பட்டால், விமான நிலையம், ரயில்வே ஸ்டேஷன் மற்றும் பொது இடங்களில், 'இன்டெர்நெட்' இணைப்பை பெறும் வகையில், இலவச, 'வை - பை' வசதியை ஏற்படுத்தி தருவதாக, தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளார்.
— ஜோல்னாபையன்
