/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
கவர்ச்சி உடையணிந்தால் சாப்பாடு இலவசம்!
/
கவர்ச்சி உடையணிந்தால் சாப்பாடு இலவசம்!
PUBLISHED ON : ஜூன் 21, 2015

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சீனாவின் ஜினான் மாகாணத்தில், 'வங் ஜியா ஹாட்பாட்' என்ற பிரபல ஓட்டல் உள்ளது. இந்த ஓட்டல் நிர்வாகம், தன் வியாபாரத்தை அதிகரிக்க, புதிய யுக்தியை கையாண்டுள்ளது. ஓட்டலுக்கு வரும் பெண்கள், முட்டிக்கு மேல் உடையணிந்திருந்தால், அவர்களுக்கான சாப்பாட்டு பில்லில், கணிசமான தொகை தள்ளுபடி செய்யப்படும் என்றும், முட்டிக்கு மேல் உடை ஏற ஏற, தள்ளுபடி தொகை அதிகமாகும் என்றும் அறிவித்துள்ளது. அத்துடன், அவர்களின் உடையளவை கணக்கிடுவதற்காக, இரு பணியாளர்கள் ஓட்டல் நுழைவாயிலில் உள்ளனர். இதனால், இந்த ஓட்டலின் முன், ஏராளமான பெண்கள் நீண்ட வரிசையில் காத்துக் கொண்டிருக்கின்றனர். எப்படி எல்லாம் கல்லா கட்டுகின்றனர் பாருங்கள்.
— ஜோல்னாபையன்.

