PUBLISHED ON : ஜூலை 09, 2023

அ நிறம் | அளவு
இமாச்சல பிரதேச மாநிலம், பார்வதிவாலி பகுதி அருகே, மலானா என்ற, போதை பொருளான கஞ்சா உற்பத்தி கிராமம் உள்ளது. மணாலியிலிருந்து, 81 கி.மீ., துாரத்தில், மலானா அமைந்துள்ளது. இப்பகுதியில் எங்கு பார்த்தாலும், கஞ்சா செடிகள் புதர் போல் வளர்ந்துள்ளன.
தங்கள் ஊர் கஞ்சாவை பற்றி பெருமையை பேசுவர், இக்கிராம மக்கள். இது, போதை கிராமம் என்றாலும், கொலை, கொள்ளை என, எவ்வித குற்ற சம்பவங்களும் நடைபெறுவது இல்லை.
உலகின் பல நாடுகளில் இருந்தும், இங்கு விளையும் உயர்தர கஞ்சாவை வாங்க வருகின்றனர். கஞ்சா வாங்க வரும் வெளிநாட்டினர், இங்குள்ள மக்களை தொடக் கூடாது. மீறி தொட்டால், கடுமையாக தண்டனை உண்டு. எனவே, இங்கு வருபவர்கள் கஞ்சா மட்டும் பெற்று திரும்புகின்றனர்!
— ஜோல்னாபையன்
