தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/காதலிக்கு முத்தம்; கம்பி எண்ணும் காதலர்!

காதலிக்கு முத்தம்; கம்பி எண்ணும் காதலர்!

காதலிக்கு முத்தம்; கம்பி எண்ணும் காதலர்!


PUBLISHED ON : ஆக 30, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 30, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தற்போதைய இளைய சமுதாயத்தினர், புதுமையாக ஏதாவது செய்ய ஆசைப்பட்டு, அது விபரீதமாக முடிந்து, 'கம்பி' எண்ணும் போக்கு, உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது.

மேற்காசிய நாடான ஈரானைச் சேர்ந்த தடகள வீரர், அலிரெஜா ஜபல்கி. அவ்வப்போது வித்தியாசமாக ஏதாவது செய்து, அனைவரது கவனத்தையும் ஈர்ப்பார்.

சமீபத்தில், தன் காதலியுடன் டெஹ்ரான் நகரில் உள்ள மிக உயரமான கட்டடத்துக்குச் சென்றார். அங்குள்ள மொட்டை மாடியின் விளம்பில் காதலியை அமர வைத்து, தானும் அமர்ந்தார். பின், காதலிக்கு முத்தம் கொடுத்தார்.

அப்படியும், அவரது புதுமை தாகம் அடங்கவில்லை. அந்த உயரமான கட்டடத்தில் தலைகீழாக தொங்கியபடி, மீண்டும் காதலிக்கு முத்தம் கொடுத்தார். இந்த அபாயகரமான காட்சியை, 'வீடியோ'வாக பதிவு செய்து, சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.

'ஒரு பொது இடத்தில், அதுவும் அபாயகரமான நிலையில், இப்படி சேட்டை செய்வோரை கடுமையாக தண்டிக்க வேண்டும்...' என, பலரும் கருத்து தெரிவித்தனர்.

இதையடுத்து, தடகள வீரரும், அவரது காதலியும் கைது செய்யப்பட்டனர்.

உயரமான இடத்தில் வைத்து, காதலிக்கு முத்தம் கொடுத்து, சாதனை படைக்க நினைத்த, அந்த தடகள வீரர், இப்போது, சிறையில் கம்பி எண்ணுகிறார்.

ஜோல்னாபையன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us