PUBLISHED ON : ஜூன் 01, 2014

ஹாரி பாட்டர் சீரிஸ் படங்களை பார்த்திருக்கிறீர்களா? அப்படியென்றால், எம்மா வாட்சன் என்ற நடிகையையும் உங்களுக்கு தெரியும். பெரும்பாலான ஹாரி பாட்டர் படங்களில் இவர் நடித்துள்ளார். சமீபத்தில், இவர் நடித்த, நோவா என்ற படம் வெளியாகியுள்ளது. இதில், டக்ளஸ் பூத் என்ற நடிகரின் மனைவியாக, நடித்துள்ளார் எம்மா. இந்த படத்தில், எம்மாவும், டக்ளசும், முத்தமிட்டு கொள்வது போன்ற ஒரு காட்சி உண்டு. இந்த காட்சியை படமாக்குவதற்கு, பல டேக்குகள் எடுக்கப்பட்டன. ஆனாலும், இயக்குனர் எதிர்பார்த்தபடி, காட்சி இல்லாததால், இந்த ஒரே காட்சி மட்டும், பல முறை எடுக்கப்பட்டது. ஒரு கட்டத்தில், முத்தம் கொடுத்து கொடுத்து, எம்மா வாட்சனின், முகத்தில், ரத்தம் கொட்டி விட்டதாம். டக்ளஸ் நிலைமையோ, இன்னும் மோசம். எம்மாவின் தலை, டக்ளஸ் மூக்கில் இடித்ததில், அவரின் மூக்கு உடைந்து, ரத்தக் காடாகி விட்டது. இதுகுறித்து, இப்போது, ஞாபகப்படுத்தினால் கூட, 'அம்மாடி, அது, நரக வேதனை...' என, இருவருமே அலறுகின்றனர்.
— ஜோல்னாபையன்.
