தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/ஆனந்த தீபாவளி ! - எல்.முருகராஜ்

ஆனந்த தீபாவளி ! - எல்.முருகராஜ்

ஆனந்த தீபாவளி ! - எல்.முருகராஜ்


PUBLISHED ON : அக் 17, 2010

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 17, 2010


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தீபாவளி என்றாலே ஆனந்தம்தானே... அப்படி இருக்கையில் அது என்ன, 'ஆனந்த தீபாவளி' என்று கேட்பவர்களுக்கு...

தீபாவளியின் போது பட்டாசு வெடித்து, புதுத்துணி உடுத்தி, விதவிதமாய் உணவுப் பண்டங்கள் செய்து சாப்பிடுவது எல்லாராலும் முடிந்து விடுவது இல்லை. அன்று, ரோட்டில் போய் பார்த்தவர் களுக்கு தெரியும்... ஒரு வீட்டில் பட்டாசு வெடித்துக் கொண்டு இருப்பர். அங்கு வெடிக்கப்படும் பட்டாசை ஏக்கத்துடன் நிறைய குழந்தைகள் சுற்றி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கும். அந்த குழந்தைகளில் பலருக்கு உடையும் இருக்காது; அப்படி இருந்தாலும், அது, கந்தலாய் கிழிந்து காணப்படும்.

அதே போல வீட்டிலே இருக்கும் பெண்களுக்கு தெரியும்... அன்று எத்தனையோ பேர் வீட்டிற்கு வந்து, 'உங்க வீட்ல செஞ்ச பலகாரம் இருந்தா கொடுங்கம்மா...' என்று கேட்டு, மீந்து போன வடையையும், இனிப்பையும் ஆர்வமாக வாங்கிக்கொண்டு போவர். இவர்களைப் பொறுத்தவரை தீபாவளி என்பது வருடத்திற்கு ஒரு நாள் வரும் சராசரி நாளே...

பெரியவர்களை விடுங்கள்... இயலாத, இல்லாத, ஏழ்மையான குழந்தைகள் என்ன பாவம் செய்தனர். அவர்களை ஏக்கத்துடன் எதிரே வைத்துக்கொண்டு கொண்டாடப்படும் தீபாவளி உண்மையில் மகிழ்ச்சி தருமா? சென்னை பாங்க் ஊழியர் சங்கர் மகாதேவனுக்கும் அந்த நிலைதான். கடந்த 13 வருடங்களுக்கு முன், அந்த வருட தீபாவளியை, தம் பகுதியில் உள்ள ஏழைக் குழந்தைகளுடன்தான் கொண்டாடுவது என்று முடிவு செய்தார். கையில் ஐந்தாயிரம் ரூபாயை வைத்துக் கொண்டு, தன் எண்ணத்தை குடும்பத்தார், உறவினர், நண்பர்களிடம்  சொன்னார். தொகை கொஞ்சம் கூடுதலாகியது.

அதை வைத்து அந்த வருடம் பல குழந்தைகளை ஒருங்கிணைத்து அவர்களுக்கு புதுத்துணி கொடுத்து, நல்ல சாப்பாடு கொடுத்து, பட்டாசு வெடிக்கவிட்டு, கலை நிகழ்ச்சி நடத்தி அவர்களை மகிழ்ச்சியில் திளைக்கச் செய்தார். அன்று, அந்த குழந்தைகள் அடைந்த சந்தோஷத்தை பார்த்த சங்கர் மகாதேவன், என்ன சிரமப்பட்டாலும் சரி, இனி வருடாவருடம் இது மாதிரி குழந்தைகளுடன் தீபாவளியை கொண்டாடுவது என்று முடிவு செய்தார். இதற்காக, 'உதவும் உள்ளங்கள்' என்ற அமைப்பை துவக்கினார். இந்த அமைப்பிற்கு பலரும் உதவ, 13வது வருடமாக இந்த வருடம் 2000 குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாட இருக்கிறார்.

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், குழந்தைகளுக்கான உடுப்புகள் அனைத்தும் அளவெடுத்து தைத்து வழங்கப்படுவதுதான். ஏனெனில், மன வளர்ச்சி குறைந்த குழந்தைகள் வயதிற்கும், வளர்ச்சிக்கும் சம்பந்தம் இல்லாமல் இருப்பர். இந்த வருடம் 25 நிறுவனங்களைச் சேர்ந்த ஊனமுற்ற, மன  வளர்ச்சி குறைந்த, ஏழ்மை நிலையுள்ள குழந்தைகளுடன் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் மற்றும் அறுசுவை விருந்துடன், பட்டாசின் குதூகலத்துடன் வருகிற 24ம்தேதி சென்னையில் இந்த விழா கொண்டாடப்பட உள்ளது. இந்த ஆனந்த தீபாவளியில் நீங்களும் பங்கேற்று, குழந்தைகளுக்கு உதவ நினைத்தால், பணம் கொடுத்தோ அல்லது உடல் உழைப்பை கொடுத்தோ பங்கேற்கலாம்.

 தொடர்புக்கு: சங்கர் மகாதேவன்  மொபைல் எண்: 094441 94743.

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us