sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்!

/

ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்!

ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்!

ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்!


PUBLISHED ON : மே 19, 2013

Google News

PUBLISHED ON : மே 19, 2013


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெண்களை சக்தி என்றும், ஆணை சிவம் என்றும் கூறுவர். இதையே, சிவசக்தி என்றனர். சிவன் பாதி, அம்பாள் பாதியாக ஒரு அவதாரமே உள்ளது. அதுதான் அர்த்த நாரீஸ்வரர். ஒரு பாதி சிவனாகவும், ஒரு பாதி அம்பாளாகவும் இருக்கும். ஒரு சமயம், தன் சரீரத்தில் பாதியை அம்பாளுக்கு சிவன் கொடுத்ததாக புராணம் கூறுகிறது. அதிலிருந்தே அர்த்தநாரீஸ்வரர் என்ற பெயர் வழங்கலாயிற்று. அதே போல ஒரு முனி குமாரன் தன் ஆயுளில் பாதியை தன் மனைவிக்கு கொடுத்தான் என்று ஒரு கதை உண்டு...

ஒரு காலத்தில் ஸ்தூலகேசர் என்ற ரிஷி, தவம் செய்து கொண்டிருந்தார். அந்த சமயம், மேனகையுடன் சேர்ந்தான் ரமித்தான் விச்வாவசு என்ற கந்தர்வன். அதன் பலன் ஒரு பெண் குழந்தை! அக்குழந்தையை அவர்கள் தேவ லோகத்துக்கு எடுத்துச் செல்ல முடியாது என்பதால், ஸ்தூலகேச மகரிஷியின் ஆசிரமத்தில் அதை விட்டு விட்டுப் போய் விட்டனர்.

அந்தப் பெண் குழந்தையை எடுத்து வளர்த்தார் மகரிஷி. அழகு, அறிவு எல்லாம் நிறைந்த அந்தப் பெண்ணை, அங்கு வந்த ருரு என்பவன் பார்த்து, மனதைப் பறிகொடுத்தான். பிறகு, தன் தந்தையின் மூலம் ஸதூலகேச மகரிஷிக்கு சொல்லி அனுப்பினான். கல்யாணத்துக்கு தேதியும் வைத்து விட்டனர்.

பிரமத்வரா என்ற அந்தப் பெண், கல்யாணம் நிச்சயமாகியிருந்த சமயம் வெளியில் உலாவச் சென்றாள். அவளை ஒரு கருநாகம் தீண்டி விட்டது; விஷம் தலைக்கேறி, அவள் சுருண்டு விழுந்து விட்டாள். இந்த செய்தி அறிந்து ஸ்தூலகேச மகரிஷி, மற்றும் ருருவும் அங்கு வந்தனர். கீழே கிடந்த பிரமத்வராயைப் பார்த்து அழுது புலம்பினான் ருரு.

இவனுடைய புலம்பலைக் கேட்ட தேவர்கள், ருருவிடம் கருணை கொண்டு ஆறுதல் கூற, ஒரு தூதனை அனுப்பினர். ருருவிடம் வந்த தேவதூதன், 'ருரு... வருத்தப்பட்டு ஆவதென்ன? பிரமத்வராயின் ஆயுள் அவ்வளவுதான். இதற்கு மேல் இவள் ஜீவித்திருக்க முடியாது. ஆனாலும், நீர் செய்துள்ள தவத்தின் பலனாக இவளைப் பிழைக்க வைக்க ஒரு உபாயம் உள்ளது. அதை வேண்டுமானால் செய்து பார்க்கலாம்...' என்றான்.

'என்ன உபாயம்? உடனே சொல்லுங்கள்; எதுவானாலும் செய்கிறேன்...' என்றான் ருரு. அதற்கு, 'உம் வயதில் பாதியை இவளுக்கு கொடுத்தால், இவள் பிழைத்துக் கொள்வாள். சம்மதமானால் பிரதிக்ஞை செய்யும்...' என்றான் தேவதூதன். உடனே ருருவும், 'என் வயதில் பாதியை இவளுக்கு கொடுக்கிறேன். இவள் பிழைத்து எழுந்து வர, தேவர்கள் அருள் புரியட்டும்...' என்று பிரார்த்தித்தான். தேவலோகத்துக்குப் போய் விட்டான் தேவதூதன். பிறகு எமனுடைய அனுக்ரகத்தால் உயிர் பெற்று எழுந்தாள் பிரமத்வரா.

இவர்களது விவாகத்தை சிறப்பாக நடத்தி வைத்தனர் முனிவர்கள். ருருவும், பிரமத்வராவும் சந்தோஷமாக வாழ்ந்தனர். இது, 'ருரு உபாக்யானம்' என்ற புராணத்தில் கூறப்படுகிறது. தன் மனைவி, நாகம் தீண்டி இறந்தாள் என்பதற்காக, நாகப் பாம்புகளின் மீது துவேஷம் கொண்டான் ருரு. எங்கே பாம்பைப் பார்த்தாலும் அதை அடித்துக் கொன்று விடுவான். ஒரு தண்ணீர் பாம்பு செய்த உபதேசத்தால், இவன் அந்த வழக்கத்தை விட்டு விட்டான்.

***

கவிஞர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம்!

*திருமுருக கிருபானந்தவாரியார், ஒரு சமயச் சொற்பொழிவில் 'பாணிக்கிரகணம்' என்று குறிப்பிட்டார். 'பாணிக்கிரகணம்' என்றால் என்ன?

திருமணத்திற்கு, வடமொழியில் அந்தப் பெயர்.

***

வைரம் ராஜகோபால்






      Dinamalar
      Follow us