தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இவருக்கு இணை இவரே!

இவருக்கு இணை இவரே!

இவருக்கு இணை இவரே!


PUBLISHED ON : செப் 04, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 04, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

செப்., 5 - விநாயகர் சதுர்த்தி

எவ்வளவு பெரிய கோபக்காரரானாலும், சிலரது முகத்தைப் பார்த்தால் சாந்தமாகி விடுவர். தாய் கோபமாக இருக்கும் போது, அவளது அன்பு மழலை, 'அம்மா...' என்று அழைத்ததுமே, அவளது நெஞ்சில், பால் சுரந்து விடுகிறதே... அத்தகைய அன்பிற்கு, அன்னை ஆதிபராசக்தியும் விலக்கல்ல!

கலியுகத்தில், தான் படைத்த உயிர்கள் செய்யும் அட்டூழியத்தைப் பார்த்து, அகிலாண்டேஸ்வரியாக இருந்த அன்னை, கோபத்தில் திருவானைக்காவலில், காளியாக மாறி விட்டாள். இதனால், மிகுந்த சிரமத்திற்கு ஆளாயினர், மக்கள். இச்சமயத்தில், அவ்விடத்திற்கு வந்த ஆதிசங்கரர், 'உயிர்கள் தவறு செய்தாலும், அவர்களைக் காப்பது உன் கடனே...' என்று கூறி, அவளின் உக்கிரத்தை குறைக்க, அம்பாளின் எதிரே, பிள்ளையாரை பிரதிஷ்டை செய்தார்.

தன் எதிரே, பிள்ளையை பார்த்ததும், அம்பாளின் கோபம் குறைந்தது. இதுதான் சமயமென, அந்த கோபக்கனலை வடித்தெடுத்து, அவளது இரண்டு

தாடங்கங்களில் (கம்மல்) வைத்து அடக்கி விட்டார், ஆதிசங்கரர்.

அம்மையின் கோபத்தைக் குறைத்த இந்த பிள்ளையாரைத் தான், 'செல்லப் பிள்ளையார்' என்கின்றனர்.

நாம் எத்தனையோ பிள்ளையார் கோவில்களுக்கு சென்றிருந்தாலும், இவருக்கு இணை, இவர் தான்.

ஏனெனில், இவர் தான் தாயின் கோபத்தை அடக்கி, பக்தர்களுக்கு அருள்பாலிப்பவர்.

அம்மாவே தண்டிக்க நினைத்தாலும், தன் பக்தர்களை காப்பாற்றி, அவர்கள் திருந்தி வாழ, வாய்ப்பு கொடுத்து, அருள்பவர்.

முன்னொரு காலத்தில் இவ்வூரை, ஜம்புகேஸ்வரம் என்பர். இங்குள்ள சிவனின் பெயர், ஜம்புகேஸ்வரர்; 'ஜம்பு' என்றால், நாவல் பழம். பிள்ளையாருக்கு நாவல் பழம் விருப்பமானது; அவருக்கு நைவேத்யம் செய்யும் போது, இதை அவசியம் படைக்க வேண்டும்.

தன்னை பற்றி அகவல் எழுதிய பக்தையான அவ்வையாருக்கு, தன் தம்பி முருகன் மூலம் நாவல் பழத்தையே கொடுத்து, 'சுட்ட பழம் வேண்டுமா, சுடாத பழம் வேண்டுமா...' எனக் கேட்டு, ஞானப்பழமே கிடைக்கச் செய்தவர், விநாயகர்.

திருவானைக்காவல் என்ற பெயரில் உள்ள, 'ஆனை'யின் முகம் தான், இவரது முகமாகவும் இருக்கிறது.

கல்வி, ஞானம் அருள்பவள் சரஸ்வதி; ஆனால், அவளை புரட்டாசியில் வணங்குவதற்கு முன்பாக, ஆவணியில் பிள்ளையாரை வணங்குவதன் நோக்கம், சரஸ்வதியை வணங்குவதற்கு எந்த விக்னமும் (தடை) வந்து விடக்கூடாது என்பதற்காகத் தான். விக்னங்களை நீக்குபவர் என்பதால் தான், இவரை, 'விக்னேஸ்வரர்' என்கிறோம்.

விநாயகர் சதுர்த்தி நன்னாளில், திருவானைக்காவல் சென்று, செல்லப் பிள்ளையாரை வணங்கி, கோபத்தை விடுத்து, அமைதியான மனம் பெற, அவரது நல்லருளைப் பெற்று வருவோம்!

தி.செல்லப்பா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us