PUBLISHED ON : செப் 04, 2016

அ நிறம் | அளவு
வாழ்க்கையை கொண்டாடுவோம்!
எதிர்பாராத திருப்பம்
ஏனென்று தெரியாத வருத்தம்
சட்டென்று மாறும் யோசனைகள்
சத்தம் போடாத ஆசைகள்!
வெட்கப்படாத ஏக்கம்
வேதனை கலந்த துக்கம்
காரணமில்லாத கோபம்
கண்ணீர் சிந்தும் தோல்வி!
மறக்க விடாத நினைவுகள்
மறைக்க முடியாத உறவுகள்
அலைபாயும் காதல்
அலைந்து தேடும் வேலை!
விட முடியாத தொடர்புகள்
விட்டொழியாத தொல்லைகள்
கலங்க வைக்கும் அவமானங்கள்
கலைய மறுக்கும் கனவுகள்!
இத்தனையும் மொத்தமாகி நிற்க
இவ்வளவு தான் வாழ்க்கை என
எதையும் தொலைத்து விட வேண்டாம்!
கிடைத்த வாழ்க்கையை
குறைகள் சொல்லி உடைத்து விடாமல்
கொண்டாடப் பழகுவோம்!
— மனோ ரெட், சென்னை.
