PUBLISHED ON : ஜன 20, 2019

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உ.பி., மாநிலம், கான்பூர், ஐ.ஐ.டி.,யில், பேராசிரியராக இருந்தவர், குருதாஸ் அகர்வால்.
ஆக., 11, 2018ல், 86வது வயதில், காலமானார். இது, சாதாரண மரணம் அல்ல; 112 நாள் உண்ணாவிரதம் இருந்து, உயிர் நீத்தார்.
இந்து ஆசாரங்களுக் காகவும், கங்கை நதிக்காகவும் குரல் கொடுத்து வந்த, இவரின் மறைவு, ஏராளமானோரை கண்கலங்க வைத்தது.
மத்திய சுற்றுச் சூழல் வாரியத்தின் முதல் உறுப்பினர் செயலராக இருந்த இவர், வாழ்வின் இறுதி வரை, கங்கை நதியின் புனிதத்தை காப்பாற்றி சுத்தமாக வைத்திருக்க வலியுறுத்தி, 109 நாட்கள், தேன் கலந்த எலுமிச்சை சாறு மட்டுமே பருகி உயிர் வாழ்ந்தார்; கடைசி, மூன்று நாளில் எதையும் குடிக்க மறுத்து, மரணத்தை தேடிக் கொண்டார்.
— ஜோல்னாபையன்.