PUBLISHED ON : ஜன 20, 2019

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நேரம் அறிய பல மார்க்கங்கள் உண்டு. இப்போது, அனைவர் கையில் உள்ள மொபைல் போனும், நேரம் துல்லியமாக அறியும் கருவியாக உள்ளது. இதுபோன்ற கருவிகள் அதிகமாக பயன்படுத்தப்படுவதால், கை கடிகாரங்களின் உபயோகம் குறைந்து வந்தாலும், அதன் விலை குறையவில்லை. 'ரோலக்ஸ்' நிறுவனத்தின், பிளாட்டினம் உலோகத்தால் உருவாக்கப்பட்ட, 'டே டேட்' கை கடிகாரத்தின் விலை, 40 லட்சம் ரூபாய். தங்க முலாம் பூசப்பட்ட கடிகாரம், 24 லட்சம் ரூபாய். 'உயர்ந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட இந்த கை கடிகாரங்கள், பழுதடையும் என்று பயப்பட தேவையில்லை...' என்கின்றனர், தயாரிப்பாளர்கள்.
— ஜோல்னாபையன்.