
'ஸ்காட்ச் விஸ்கி' என்ற பெயரை கேட்டாலே, 'குடிமகன்'கள் வாயில் எச்சில் ஊறும். ஸ்காட்லாந்தில் உள்ள பிரபல விஸ்கி தொழிற்சாலை தான், படத்தில் காணப்படுகிறது.
பழமைக்கு ஏற்ப தான், விஸ்கியின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. 10 ஆண்டு பழமையான, 'டாலிஸ்கெர்' விஸ்கி, 40 பவுண்டு. 1 பவுண்டு என்பது, இந்திய மதிப்பில், 88 ரூபாய். 35 ஆண்டு, 'டாலிஸ்கெரின்' விலை, 1,000 பவுண்டு. 150 ஆண்டுகளாக, ஒரே அருவியில் இருந்து வரும் தண்ணீர் தான், விஸ்கி தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது.
உலகப் புகழ்பெற்ற, 'பீட் விஸ்கி' எப்படி தயாரிக்கின்றனர் என்று பார்ப்போம்... ஆயிரக்கணக்கான ஆண்டுகள் தண்ணீரில் மூழ்கி கிடக்கும் பாசி செடிகளை சேகரித்து, அதை காய வைத்து, தீயிட்டு கொளுத்துகின்றனர் அதிலிருந்து வெளிப்படும் புகையில் இருந்து தான், 'பீட் விஸ்கி' தயாரிக்கப்படுகிறது.
அம்மாடியோவ்... விஸ்கி தயாரிப்பில் இத்தனை விஷயங்கள் இருக்கிறதா!
— ஜோல்னாபையன்.

