PUBLISHED ON : ஜன 20, 2019

மறைந்த நடிகரும், தயாரிப்பாளருமான பாலாஜியின் மகன் சுரேஷ், சினிமா உலகிலிருந்து தந்தை வெளியேறியது பற்றி நினைவு கூர்கிறார்...
'சிவாஜி நடித்த, 13 வெற்றி படங்களை தயாரித்திருக்கிறார், அப்பா. சிவாஜி, ரஜினி மற்றும் கமல் போன்ற நடிகர்கள், வீட்டுக்கு வரும்போது, ரொம்ப சந்தோஷப்படுவார். மது மற்றும் அம்மாவின் ஸ்பெஷல் சமையலும் இருக்கும். சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு ரயிலேற வரும் சில மணி நேரத்துக்கு முன், அப்பாவுடன் உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்பார், சிவாஜி.
இப்படிப்பட்ட நடிகர்களில், ஒருவரின் தவறான செயலால், மனமுடைந்திருந்தார், அப்பா. அப்போது, அவர் தயாரித்த ஒரு படத்தின் உரிமை கேட்டு, நீதிமன்றத்தை நாடினார். வழக்கு நடந்து கொண்டிருந்தபோது, சொந்த யூனிட்டை சேர்ந்தவர்கள் கூட, அப்பாவுக்கு எதிராக செயல்பட்டனர்.
இதனால், மனமுடைந்து தான், சினிமாவுக்கு முழுக்கு போட்டார். வழக்கில் வெற்றி பெற்றபோதும், சினிமா வேண்டாம் என்று முடிவு செய்தார், அப்பா, என்கிறார், சுரேஷ் பாலாஜி.
—ஜோல்னாபையன்.

