தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/ஆரோக்கியம் தரும் வாழை இலை!

ஆரோக்கியம் தரும் வாழை இலை!

ஆரோக்கியம் தரும் வாழை இலை!


PUBLISHED ON : நவ 05, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 05, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சாப்பிடுவதற்கு முன், வாழை இலையில் தண்ணீர் தெளிக்கிறோம்; சாப்பிட்ட பின் இலையை உள்பக்கமாக மடிப்பதற்கான காரணம் தெரியுமா?

இயற்கையுடன் சேர்ந்த வாழ்வு தான், தமிழர் பண்பாடு. இயற்கை நமக்கு நிறைய கற்றுக் கொடுத்தது. அதற்கு நாமும் நன்றியுடன் இருந்தோம்.

அந்த நன்றிக்குப் பரிசாக கிடைத்தது தான், நம் தாத்தா - பாட்டிக்கு இருந்த ஆரோக்கியம்.

நாம் நினைத்தாலும் நம்மகிட்ட இருந்து விலக்க முடியாத, இயற்கை நமக்கு கொடுத்த பரிசு, வாழை இலை.

எவர்சில்வர், பீங்கான் தட்டுகள், பேப்பர் பிளேட் மற்றும் பிளாஸ்டிக் இலைகள் என, வினோதமாக முயற்சி செஞ்சாலும், அதற்கெல்லாம் ஈடாகாது, வாழை இலை.

பொது நிகழ்ச்சி, வீட்டு விழாக்கள், உணவகம் என, எங்கும் வாழை இலைக்கென்று தனி மவுசு இருக்கிறது.

சரி, வாழை இலையிலும், அந்தச் சாப்பாட்டு முறையிலும் அப்படி என்ன இருக்கு?

சைவமோ, அசைவமோ, எதுவாக இருந்தாலும், வாழை இலை போட்டுச் சாப்பிட்டால், எத்தகைய செரிமானக் கோளாறையும் சரி செய்துவிடும்.

மதுரை குடல் கொழம்பா, காரைக்குடி வத்தக்கொழம்பா, கிராமத்து நாட்டுக்கோழிக் கொழம்பா... சுடச்சுட வாழை இலையில் இருக்கும் சோற்றில் ஊற்றலாம். குழம்பு வாசமும், சூட்டுல பொசுங்கின இலை வாசமும் சேர்ந்து, ஆளையே மயக்கும்.

தோப்புல இருந்து வர்ற இலைகளில் பூச்சி மற்றும் மண் அழுக்கு எல்லாம் இருக்கும். அதைச் சுத்தம் பண்றதுக்குத்தான் தண்ணி தெளிச்சு துடைக்கிறோம்.

அகண்ட பக்கம் வலது கைக்கு வசதி. சோறு வகையெல்லாம் இங்க தான் வைக்கணும். குறுகின பக்கம் இடது கைக்கு வரணும். இலையோட மேல் பக்கம், 'தொடு கறி'ங்க. இடப்பக்கம், அப்பளம்.

இலையை உள்பக்கமா மடிச்சா உறவு நீடிக்கும். வெளிப்பக்கமா மடிச்சா, முறியும்ன்னு சொல்றது, பழங்கால நம்பிக்கை.

பந்திகளில் எதிரெதிர் பக்கமாக உக்காந்திருப்போம். வெளிப்பக்கமாக மடிக்கும்போது, நாம் சாப்பிட்ட எச்சில் அடுத்தவங்க இலையில படும் என்ற முன் எச்சரிக்கை, பொதுவெளி நாகரிகம் தான் அது!

மேலும், தினமும் வாழை இலையில் சாப்பிட்டால், உடல் பொலிவு பெறும்.

எனவே, வாழை இலையில் சாப்பிட்டு, ஆரோக்கியமாக இருப்போம்.

தொகுப்பு: எம்.ஏ.நிவேதா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us