PUBLISHED ON : நவ 05, 2023

அ நிறம் | அளவு
ரத்த வங்கி கேள்விப்பட்டு இருக்கிறோம். ஆனால், 'டிரஸ் வங்கி' பற்றி கேள்விபட்டதுண்டா?
கேரள மாநிலம், இடுக்கி, ஈராற்றுபேட்டையில் இருக்கிறது, இந்த டிரஸ் வங்கி.
திருமணத்தின் போது மணமக்கள், விலை உயர்ந்த, சிறப்பு ஆடைகளை அணிவதுண்டு. ஆனால், வசதி இல்லாதவர்களால் இவைகளை வாங்கி அணிய முடிவதில்லை. இவர்களுக்கு இரவலாக இந்த சிறப்பு ஆடைகளை வழங்குவது தான், இந்த வங்கியின் பணி.
தங்கள் திருமணத்துக்கு பின் பயன்படுத்தாமல் வைத்துள்ள, விலை உயர்ந்த திருமண ஆடைகளை, இந்த வங்கியில் கொடுத்து விடுகின்றனர், வசதியானவர்கள். அதை, ஏழை மணமக்களுக்கு இரவலாக, இந்த வங்கியில் இருந்து கொடுக்கின்றனர்.
— ஜோல்னாபையன்
