PUBLISHED ON : ஜன 15, 2023

அ நிறம் | அளவு
வீட்டை பூட்டி வெளியூர் செல்வதற்கு முன், நீங்கள் போகும் தேதி, வரும் தேதியை குறிப்பிட்டு மனு ஒன்றை அருகிலுள்ள காவல் நிலையத்தில் கொடுக்கலாம். காவல்துறையினர், அதை பதிவு செய்து, இரவு ரோந்து வரும்போது, உங்கள் வீட்டை கவனத்துடன் கண்காணிப்பர்
* இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியே செல்லும்போது, 'டிவி'யை சத்தம் குறைவாக வைத்து செல்லலாம். ஓரிரு அறைகளில் விளக்குகளையும், மின்விசிறிகளையும், 'ஆன்' செய்து வைக்கலாம். வீட்டுக்குள் ஆள் இருக்கின்றனர் என்ற நினைப்பில் திருடர்கள் கைவரிசை காட்டாமல் போய் விடுவர்.
