PUBLISHED ON : ஜன 15, 2023

அ நிறம் | அளவு
ஐரோப்பிய நாடான குரேஷியாவின் இஸ்டிரியா மாகாணத்தில் உள்ள, ஹம் என்ற நகரம் தான், உலகின் மிகச் சிறிய நகரம் என்ற பெருமையை பெற்றுள்ளது.
மலை உச்சியில் அமைந்துள்ள இந்த நகரத்தில், மொத்தமே இரண்டு தெருக்கள் தான் உள்ளன. 2021ம் ஆண்டு, மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இங்கு, 27 பேர் மட்டுமே வசிக்கின்றனர்.
சுற்றுலா வருவோரை நம்பித் தான் இங்குள்ளவர்களின் வாழ்வாதாரம் உள்ளது. போதிய அடிப்படை வசதிகள் இன்மை, கடுமையான குளிர் போன்ற காரணங்களால், இந்நகரில் வசிக்க யாரும் விரும்புவது இல்லை.
— ஜோல்னாபையன்
