PUBLISHED ON : ஜன 15, 2023

கரும்பில் உடலுக்குத் தேவையான கால்சியம், இரும்பு, மெக்னீசியம், பொட்டாசியம் போன்ற சத்துகள் உள்ளன.
இவை தவிர, உடலுக்கு மிகவும் தேவையான, பீனால் மற்றும் பிளேவனாய்டு ஊட்டச்சத்துக்கள், அதிக அளவில் உள்ளன. உணவு மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் பெருகிவிட்ட இந்த காலத்தில், கரும்பு போன்ற, 'ஆன்டி ஆக்சிடன்ட்ஸ்' நிறைந்த பொருட்களை உட்கொள்ளத் தவறக் கூடாது.
ஆலும் வேலும் மட்டுமல்ல, கரும்பும் பல்லுக்கு உறுதி தான். அதனால் கரும்பை, மென்றே சாப்பிடலாம். இதனால், பற்கள் உறுதி பெறும். பல்லால் கடித்து மென்று சாப்பிட முடியாதவர்கள் சாறாக அருந்தலாம்.
செங்கரும்பில் முழுமையாக, 'குளுக்கோஸ்' மட்டுமே நிறைந்து இருக்கும். வெண் கரும்பில், 'சுக்ரோஸ்' எனும் கூட்டுச் சர்க்கரை அதிகம் உள்ளது. ஆக, வெண் கரும்பு, நீரிழிவு நோயாளிகள் உட்பட, அனைவருக்குமான தேர்வாக இருக்கும்.
செங்கரும்பு, சிறுவர்களுக்கும், நீரிழிவு நோய் இல்லாதவர்க்கும் ஏற்றது.
இதன் மருத்துவ குணங்கள்:
* கரும்பு கற்கண்டு, தாது வலிமையை கூட்டும். பாலில் கரும்பு கற்கண்டு, முருங்கைப்பூ சேர்த்து காய்ச்சி, தினமும் இரவு ஒரு கப் சாப்பிட்டு வர, தாது புஷ்டி ஏற்படும்
* நீரில் கரும்பு வேரை போட்டு காய்ச்சி, அரை கப் வீதம் தினமும் இருமுறை குடிக்க, சிறுநீர்க்கடுப்பு தீரும்
* குடல்புண், மூலம் மற்றும் வெட்டை சூட்டை குணப்படுத்தும்
*புண்களை ஆற்றும், கிருமி நாசினியாகவும் பயன்படுகிறது
* கரும்புச் சாறுடன், இஞ்சி சாறு கலந்து அருந்த, வலிப்பு நோய் குணமாகும்
* ஒரு கப் கரும்பு சாறுடன், சிறிதளவு வெல்லம், ஒரு டீ ஸ்பூன் நெய் சேர்த்து சாப்பிட உடல் குளிர்ச்சி பெறும்
* கரும்புச் சாறுடன், இஞ்சி சாறு, எலுமிச்சை சாறு கலந்து அருந்தி வர, பித்தம் குறையும்.
* கரும்புச் சாறுடன் சிறிதளவு தேன், எலுமிச்சை சாறு கலந்து அருந்த, மலச்சிக்கல் தீரும்.
மு.நாகூர்
