/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
ஹிட்லரின் மது கோப்பைகளுக்கு, மதிப்பு இல்லை!
/
ஹிட்லரின் மது கோப்பைகளுக்கு, மதிப்பு இல்லை!
PUBLISHED ON : ஆக 21, 2011

ஜெர்மனியின் சர்வாதிகாரியான ஹிட்லரை பற்றி, தெரியாதவர்கள் அதிகம் இருக்க முடியாது. கொடுங்கோல் ஆட்சி நடத்தி, சரித்திரத்தின் கறுப்பு பக்கங்களில் இடம் பெற்ற நபர். ஹிட்லர் என்ற பெயரைக் கேட்டாலே, உலக நாடுகள் அஞ்சி நடுங்கின.
இப்போது நிலைமை, தலைகீழாகி விட்டது. 1945ல், எதிரிப் படைகளின் கண்களில் பட்டு விடக் கூடாது என்பதற்காக, ஹிட்லர், ஜெர்மனியில், விசேஷமாக வடிவமைக்கப்பட்டிருந்த பதுங்கு குழியில் தங்கியிருந்தார். அப்போது, மது குடிப்பதற்காக, பிரத்யேகமான கண்ணாடி கோப்பைகளை பயன்படுத்தினார்.
இந்த கோப்பைகளில், நான்கு மட்டும் எப்படியோ, சிலரின் கைகளுக்கு கிடைத்து விட்டது; இதை, பொக்கிஷமாக பாதுகாத்து வந்தனர். இந்த கோப்பைகளின் மேல் விளிம்பில், தங்க முலாம் பூசப்பட்டுள்ளது. நாஜிப் படைகளின் சின்னமாக கருதப்படும் கழுகு மற்றும் ஸ்வஸ்திக் ஆகியவற்றின் உருவங்கள், இந்த கோப்பைகளில் பொறிக்கப்பட்டுள்ளன. சமீபத்தில், இந்த கோப்பைகள் ஏலம் விடப்பட்டன.
ஆனால், இதை ஏலம் எடுக்க, யாரும் அதிக ஆர்வம் காட்டவில்லை. இறுதியில், சுவீடனைச் சேர்ந்த ஒருவர், நான்கு கோப்பைகளையும், ஒரு லட்சத்து, 30 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தார். 'வழக்கமாக, பழங்காலத்தைய, சாதாரண பொருட்கள் கூட, பல லட்சம் ரூபாய்க்கு ஏலம் போகும். ஆனால், ஹிட்லர் பயன்படுத்திய கோப்பைகள், இவ்வளவு குறைவாக ஏலம் போனது, ஆச்சரியமாக உள்ளது...' என்கின்றனர் ஏலம் நடத்தியவர்கள்.
— ஜோல்னா பையன்.