/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
பூனைக்கு பயப்படும் ஹாலிவுட் நடிகர்!
/
பூனைக்கு பயப்படும் ஹாலிவுட் நடிகர்!
PUBLISHED ON : ஏப் 03, 2016

உலக ஆணழகன் பட்டம் பெற்ற, ஹாலிவுட் நடிகரும், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாண கவர்னருமான அர்னால்டுக்கு, பூனையை கண்டால் பயம். அதுவும், 'முகி' என்ற கறுப்பு பூனை என்றால், மிகவும் பயம்.
இவரின் அம்மாவிற்கு பூனை என்றால் மிகவும் பிடிக்கும். அதனால், வீட்டில் ஏராளமான பூனைகளை வளர்த்து வந்தார். சிறுவன் அர்னால்டுக்கு, 'ஜிம்' போய், உடற்பயிற்சி செய்ய ஆசை. ஆனால், போலீஸ்காரரான தந்தையின் சிறிய வருமானத்தில், அதற்கு வழியில்லை. இந்நிலையில், ஒருநாள், 'ஜிம்'முக்கு போக பணம் கேட்டு, அம்மாவிடம் வம்பு செய்த போது, அவனது அம்மா கால் தடுக்கி விழுந்து விட்டார். அதை கவனித்த, 'முகி' என்ற கறுப்பு பூனை, அர்னால்டு மீது பாய்ந்து தாக்கியது. மிரண்டு போன சிறுவன் தலைதெறிக்க ஓடினான்.
அதன்பின், ஏதாவது குறும்பு செய்தால், 'ஒழுங்கா இரு; இல்லாட்டி முகியை கூப்பிடுவேன்...' என்பாராம் அவரது அம்மா. உடனே, அமைதியாகி விடுவான் சிறுவன். இதை நினைவு கூர்ந்து, 'இன்றும் அம்மாவை நினைக்கும் போது, முகியும் நினைவுக்கு வரும்...' என்கிறார் அர்னால்டு.
-- ஜோல்னாபையன்.

