
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவையான பொருட்கள்:
பச்சைப்பயறு - ஒரு கப்
பொடித்த வெல்லம் - ஒரு கப்
பால் - ஒன்றரை கப்
முந்திரி மற்றும் பாதாம் - தலா பத்து
செய்முறை: வெறும் வாணலியில் பச்சைப் பயறை வறுத்து, வேக விடவும். ஆறிய பின், வெல்லத்தை கரைத்து வடிகட்டி, அதனுடன் கலக்கவும். முந்திரி மற்றும் பாதாம் பருப்புகளை பாலில் ஊற வைத்து அரைத்து, வேக வைத்த பயறுடன் கலக்கவும். இதை, அடுப்பில் வைத்து கொதிக்க விட்டு, இறக்கினால், பச்சைப்பயறு கீர் தயார்!
பச்சைப்பயறு உடலுக்கு குளிர்ச்சியை தரும்.

