PUBLISHED ON : ஏப் 03, 2016

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவையான பொருட்கள்:
துருவிய இளம் வெள்ளை பூசணி - அரை கப்
அவல் - ஒரு கப்
எலுமிச்சை சாறு - சிறிதளவு
தயிர் - ஒரு தேக்கரண்டி
கேரட் - ஒன்று (துருவியது)
நறுக்கிய புதினா மற்றும் கொத்தமல்லி - ஒரு கைப்பிடி அளவு
மஞ்சள் தூள் மற்றும் உப்பு - சிறிதளவு
தாளிக்க:
காய்ந்த மிளகாய் - இரண்டு
கடுகு, பெருங்காயத்தூள் மற்றும் எண்ணெய் - சிறிதளவு
செய்முறை: பூசணி மற்றும் கேரட் துருவல், உப்பு, அவல், எலுமிச்சை சாறு, மஞ்சள் தூள், தயிர், கொத்தமல்லி மற்றும் புதினா ஆகியவற்றை சேர்த்து நன்கு பிசிறவும். வாணலியில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவற்றை தாளித்து, பூசணி - அவல் கலவையை சேர்த்து இரு நிமிடம் புரட்டி எடுக்கவும்.
குறிப்பு: பூசணி துருவலில் இருக்கும் நீரே, அவல் ஊறுவதற்கு போதும்.

