தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/வீட்டுக் குறிப்பு!

வீட்டுக் குறிப்பு!

வீட்டுக் குறிப்பு!


PUBLISHED ON : ஏப் 12, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 12, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

முகம் பார்க்கும் கண்ணாடியை தேயிலையால் துடைத்தால், அழுக்கு நீங்கி, 'பளபள'வென்று இருக்கும்.

* ஊசியில் நுால் கோர்க்க சிரமமாக இருந்தால், நுாலின் நுனியில் சோப்பை கொஞ்சம் தடவி கோர்த்தால் சுலபமாகும்

* துணி தைக்கும் ஊசியை, ஒரு சிறு கம்பளி துண்டில் குத்தி வைத்தால், துரு பிடிக்காமல் இருக்கும்

* கண்ணாடி வளையல்களை வாங்கியவுடன், தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து பிறகு அணிந்து கொண்டால், நீண்ட நாட்களுக்கு உடையாமல் இருக்கும்.

* மஞ்சள் கிழங்குகளை உலர்த்தி, ஈரமில்லாத பாட்டில்களில் ஒரு துண்டு கெட்டியான கற்பூரத்துடன் போட்டு இறுக மூடி வைத்தால், உளுத்து போகாது.

* வேர்க்கடலை உருண்டை செய்யும்போது, வெல்லப் பாகுடன் சிறிது சர்க்கரையையும் சேர்த்து செய்தால், கரகரப்புடன் இருக்கும்.

* வெள்ளை, 'கேன்வாஷ் ஷூ'வை, கழுவி சிறிது நீலம் கலந்த நீரில் முக்கி எடுத்து வெயிலில் காய வைத்தால், 'பளிச்'சென்று இருக்கும்.

* பல் துலக்கும் பிரஷ்ஷை, இரண்டு நாட்களுக்கு ஒருமுறை, உப்பு கலந்த நீரில் போட்டு உபயோகிக்க வேண்டும்.

* மஞ்சள் மற்றும் மிளகாய் பொடியில் சிறிது உப்பை கலந்து வைத்தால், வண்டுகள் வராது.

* மிளகாய் பொடிக்கு, மிளகாய் வறுக்கும்போது சிறிது உப்பை சேர்த்தால், கமறல் வராது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us