PUBLISHED ON : அக் 04, 2020

அ நிறம் | அளவு
* மஞ்சள் கிழங்குகளை உலர்த்தி, ஈரமில்லாத பாட்டில்களில் ஒரு துண்டு கெட்டியான கற்பூரத்துடன் போட்டு இறுக மூடி வைத்தால், உளுத்து போகாது
* பூக்கள் வாடாமல் இருக்க, ஈர துணியில் சுற்றி வைக்காதீர். பூக்களை ஒரு தட்டில் வைத்து, தண்ணீரில் அலம்பிய ஒரு பாத்திரத்தை அதன் மீது கவிழ்த்து வைத்தால், காலையில் புதிதாக பறித்த மலர்கள் போல இருக்கும்
* தினமும் சாம்பிராணி புகை போடுவது நல்லது. ஒட்டடை பிடிக்காது; கொசுக்கள், நச்சு பூச்சி, புழுக்களும் வீட்டை விட்டு வெளியேறும்.
