PUBLISHED ON : மே 14, 2023

வீட்டில், மரச் சாமான்களுக்கு உபயோகிக்கும் பெயின்ட்டை, முறத்தில் தடவி காய வைத்தால், நீண்ட நாட்கள் முறம் புதுசு போல இருக்கும். பூச்சிகளும் அரிக்காது.
* டூல் பாக்சில், சாக்பீஸ் கட்டி அல்லது கரித் துண்டை போட்டால், அது ஈரப்பசையை உறிஞ்சி, 'டூல்ஸ்' துருப்பிடிக்காமல் இருக்க உதவும்.
* செருப்பின் மேல் பாக தோலின் அடிப்பாகத்தில் மெழுகு வர்த்தியை நன்றாக தேய்த்து, பிறகு அணிந்து கொண்டால், செருப்பு கடிக்கவே கடிக்காது.
* துணி பீரோவை சுத்தம், செய்யும் போது, முதலில் பீரோ தட்டுகளில், பயன்படுத்திய கொசு மேட்டை ஐந்தாறு பரப்பி, அதன் மேல் பேப்பர் போட்டு அடுக்கினால் பூச்சிகள் நெருங்காது.
* கறிவேப்பிலை செடிக்கு புளித்த தயிர் அல்லது மோர் விட்டால் செழித்த வளரும்.
* மாதுளம் பழத் தோல்களின் உள்பாகத்தை எடுத்து பல் தேய்த்தால், பல் உறுதியாகவும், பளிச்சென்றும் இருக்கும்.
