தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/வீட்டுக்குறிப்பு

வீட்டுக்குறிப்பு

வீட்டுக்குறிப்பு


PUBLISHED ON : ஜூலை 23, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 23, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* டப்பாவில் சிறிதளவு சர்க்கரையை துாவி, அதனுள் பிஸ்கட்டை போட்டு வைத்தால், நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்

* புதினா அதிகமாக இருந்தால், வெயிலில் காய வைத்து, அதனுடன் உப்பு, சீரகம் சேர்த்து பொடியாக்கி, 'ப்ரிஜ்'ஜில் வைத்து, தேவையான போது தயிரில் போட்டால், திடீர் தயிர் பச்சடி தயார்

*கொசு தொல்லைக்காக போடப்பட்டுள்ள நெட்லானில் சிறிய துளைகள் ஏற்பட்டு விட்டால், 'செலோ டேப்'பை கட் பண்ணி ஒட்டலாம்

* சமையல் அறையில் எண்ணெய் பசையுள்ள இடத்தில், சுண்ணாம்புடன், மண்ணெண்ணெய் கலந்து அடிக்கலாம்.

கத்தரிக்காயை சுட்டு, பச்சடி, தொக்கு, கூட்டு போன்றவை செய்வதற்கு, காயின் மீது நல்லெண்ணெய் தடவி, காம்புடன் ஒரு தட்டில் வைத்து, குக்கரில் ஒரு விசில் விட்டு எடுக்க, காய் நன்றாக வெந்து விடும்

* சாம்பாரில் புளிப்பு சுவை அதிகமாகி விட்டால், ஒரு வெங்காயத்தை பொடியாக நறுக்கி, தேவையான பச்சை மிளகாய் அல்லது காய்ந்த மிளகாய் சேர்த்து சிறிதளவு எண்ணெய் விட்டு வதக்கி, சாம்பாரில் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கினால், சுவையாக இருக்கும்

*மைசூர்பாகு செய்வதற்கு கடலை மாவு மட்டும் சேர்ப்பதற்கு பதிலாக, இரண்டு பங்கு பாசிப்பருப்பு மாவு, ஒரு பங்கு கடலை மாவு என்ற விகிதத்தில் கலந்து செய்தால், மிருதுவாகவும், ருசியாகவும் இருக்கும்

* குழம்பு வைக்க வெங்காயம், தக்காளி, காய்கறிகளை வதக்கும்போது, முதலில் வெங்காயம், காய்கறிகளை வதக்கி, பிறகு தக்காளி சேர்த்தால், சுவையாக இருக்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us