PUBLISHED ON : ஜூலை 23, 2023

* பனங்கருப்பட்டியின் மருத்துவ பயன்கள் அளவில்லாதது. சர்க்கரை மற்றும் பல நோய்களின் தாக்கத்திலிருந்து விடுபட, நமக்கு கிடைத்த அருமருந்து தான், கருப்பட்டி.
* பனங்கருப்பட்டியில் இரும்பு மற்றும் கால்சியம் சத்து அதிகமாக உள்ளது. இதனால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
* வைட்டமின் பி மற்றும் அமினோ அமிலங்கள் நிறைந்துள்ள கருப்பட்டி, நீரிழிவு நோயை கட்டுப்படுத்துகிறது
* சர்க்கரைக்கு பதிலாக, கருப்பட்டி காபி குடிக்கலாம்.
* கருப்பட்டி, ரத்தத்தை சுத்திகரித்து, உடலுக்கு சுறுசுறுப்பை கொடுக்கும். மேனி பளபளப்படையும்
* சீரகத்தை வறுத்து, கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டால், நன்கு பசி எடுக்கும்
* ஓமத்தை கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டால், வாயு தொல்லை நீங்கும்
* கருப்பட்டியை பயன்படுத்தினால் பற்கள், எலும்புகள் உறுதியாகும்
* நீரிழிவு நோயாளிகள், கைக்குத்தல் அரிசி சாதம் மற்றும் கருப்பட்டி சாப்பிட்டு வந்தால், சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருக்கும்
* சுக்கு, கருப்பட்டி, பெண்களின் கர்ப்பப்பைக்கு மிகவும் ஏற்றது
* குழந்தை பெற்ற பெண்கள், சுக்கு, மிளகு கலந்து கருப்பட்டியை சாப்பிட்டால், பால் நன்றாக சுரக்கும்
* உடல் இயக்கத்தையும், சீரான சக்தியையும் சம நிலையில் வைக்கிறது, கருப்பட்டி.
